Published:Updated:

எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்... ஆவண செய்வாரா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி?!

எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்... ஆவண செய்வாரா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி?!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Published:Updated:
எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பிப்பதற்கான தேதியைத் தள்ளிவைக்கக் கோரி மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வாணையத்தால் ( TRB) நடத்தப்பட வேண்டும். இந்த தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வுக்கு ஆசிரியர் படிப்பில் டிப்ளோமோ பட்டமும், இரண்டாம் தாள் தேர்வுக்கு பி.எட் பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். பி.எட் படிப்பு இரண்டாம் வருடம் படிப்பவர்களும், முதல் வருட மதிப்பெண் சான்றிதழைக் காட்டி விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு
விகடன்

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கல்வியியல் பல்கலைக்கழகத்தால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் அனைத்துத் தேர்வுகளும் நடத்திமுடிக்கப்பட்டன. ஆனால், தேர்வின் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், சுமார் 75,000 மாணவர்களால் தகுதித் தேர்வில் கலந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து திருச்சியில் பி.எட் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவரிடம் பேசினோம். "முதல் வருட மாணவர்களின் தேர்வுத் தாள்களை அந்தந்த கல்லூரிகள்தான் மதிப்பீடு செய்கின்றன. இதனால், பல்கலைக்கழகம் நினைத்தால் மாணவர்களின் விடைத்தாள்களை சீக்கிரம் மதிப்பீடு செய்து, முடிவுகளை அறிவிக்க முடியும். ஆனால், பல காரணங்களைச் சொல்லி தாமதம் செய்கின்றனர். இதனால், எங்களால் தகுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது" என்றார் கவலையுடன்.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேசியபோது, "பிப்ரவரி 16-ம் தேதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அதனால், இந்த வருடம் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாகும். எனவே, இந்த வருடம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது" என்றார்.

அன்பில்  மகேஸ்  பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இது தவிர, வருடந்தோறும் தகுதித் தேர்வு தவறாமல் நடைபெற வேண்டும். ஆனால், கடந்த பத்து வருடங்களில் மூன்று முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வரதராஜனிடம் பேசினோம். "2013-ல் 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 2014-ல் தேர்ச்சி பெறுவதற்கு வெறும் 80 மதிப்பெண்கள் இருந்தால் போதும் என்று அறிவித்தார்கள். இதனால், தேர்வில் தேர்வானவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது. பின்னர், பணியிடங்களை நிரப்புவதற்கு, தகுதித் தேர்வு மதிப்பெண்ணோடு சேர்ந்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண்களும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இதனால், தகுதித் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்ற பலருக்கும் வேலை கிடைக்கவில்லை. அவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்று, 10-ம் வகுப்பில் நிறைய மதிப்பெண் எடுத்த பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் 2017-ல் ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் நான் எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனால் இன்று வரை எனக்கு உட்பட என்னுடன் தேர்ச்சி பெற்ற பலருக்கு பணி வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தமிழக அரசு
தமிழக அரசு

இன்னொரு புறம், தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் ஏழு வருடங்கள் வரைதான் செல்லும் என்று இருந்தது. அதை தற்போது ஆயுள்காலத் தகுதி சான்றிதழாக நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால், ஒவ்வோர் ஆண்டும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை உயருமே தவிர, வேலைவாய்ப்பு பெரும் கேள்விக்குறியாக மாறும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, பணி நியமனம் வழங்கப்படாததால் பலர் இன்றைக்கு வேறு வேலைகளுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அரசின் தேர்தல் அறிக்கையில் 177-ம் வாக்குறுதியாக 2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் உரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக, பணி நியமனம் கோரி பல போராட்டங்களை நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், எந்த அரசுமே இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக இல்லை.

ஆசிரியர் தகுதித்  தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு

தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியிலிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலினும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism