Published:Updated:

"இரண்டு முறை தோல்வி; 3- வது முயற்சியில் கிடைத்த வெற்றி" - ஐ.ஏ.எஸ் தேர்வு குறித்து திருச்சி கலெக்டர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

"இரண்டு முறை தோல்வி; 3- வது முயற்சியில் கிடைத்த வெற்றி" - ஐ.ஏ.எஸ் தேர்வு குறித்து திருச்சி கலெக்டர்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

Published:Updated:
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்
இன்றைய தேதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர்வதற்காக, போட்டித் தேர்வுகளை தீவிரமாக எழுதி வருகின்றனர். ஆனால், போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெறுவதில்லை.

போட்டித் தேர்வுகளுக்காக முழு திட்டமிடலோடு, தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு தைரியமாகக் களத்தில் இறங்கும் மாணவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர். அந்த வகையில், ஐ.ஏ.எஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி பெறுவதற்கான உத்திகளையும், சூட்சுமங்களையும் கற்றுக்கொள்ள வேண்டுமா..! இதோ உங்களுக்கான நேரம் வந்துவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து ஐஏஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் ஒன்றினை திருச்சியில் நடத்தவிருக்கிறது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஜூலை 31-ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனை முகாம் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி அழைப்பிதழ்
நிகழ்ச்சி அழைப்பிதழ்

இந்த ஆலோசனை முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஐ.ஏ.எஸ் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர். மேலும், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 338-வது ரேங்க் எடுத்து UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஏஞ்சலின் ரெனிட்டா உள்ளிட்ட பல வெற்றியாளர்கள் இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொண்டு அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் பேசுகையில், "நான் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். படிச்சி முடிச்சதும் இந்தியா ஆயில் கார்ப்பரேஷன்ல 4 வருடம் வேலை பார்த்தேன். 'ஐ.ஏ.எஸ் எக்ஸாம்க்கு ட்ரை பண்ணுங்கப்பா'ன்னு எங்க அண்ணன்கள்கிட்டயும், என்கிட்டயும் அப்பா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அண்ணனுங்க ரெண்டு பேரும் சாப்ட்வேர் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டாங்க. சரி, அப்பாவும் சொல்லிக்கிட்டே இருக்காங்களேன்னு ட்ரை பண்ணி பார்க்கலாம்னு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்ல பார்த்துக்கிட்டு இருந்த வேலையை விட்டுட்டு, யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரானேன். முதல் முயற்சியில இன்டர்வியூ வரை சென்றும் வெற்றி பெற முடியலை. இரண்டாவது முயற்சியில் முதல்நிலை தேர்விலேயே தோத்துட்டேன். தொடர்ந்து மன உறுதியுடன் தயாராகி மூன்றாவது முறை தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிட்டேன். நான் ஒரு இன்ஸ்டிட்யூட்டுக்கு போய் மட்டும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னை தயார் படுத்திக்கலை. டெஸ்ட் சீரிஸ்க்காக மட்டும் தான் ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு போயிருக்கேன்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்

என்னைப் பொறுத்தவரை எந்தவொரு தேர்வாக இருந்தாலும் சரியான திட்டமிடலோடு சிறப்பான பயிற்சியுடன், பெரும் மன உறுதியோடு அணுகினால் நிச்சயமாக வெற்றி பெறலாம். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு நான் எப்படி தயாரானேன், என்னென்ன உத்திகளைக் கடைபிடித்தேன், நான் கண்ட சவால்கள், செய்த தவறுகள், திருத்திக் கொண்டவை என அனைத்தையும் திருச்சியில் நடக்கவிருக்கின்ற ஆலோசனை முகாமில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வாருங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்" என்றார்.

இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. இலவசம் தான். ஆனால், கலந்துகொள்பவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவுக்கு - https://bit.ly/3oFmcBq