Published:Updated:

`கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்!’ - மத்திய அரசு அறிவிப்பு

தேர்வு
தேர்வு

கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவை நாட்டின் அனைத்து இயல்பு விஷயங்களையும் மாற்றியுள்ளது. அதில் ஒன்றுதான் மாணவர்களின் தேர்வு. தமிழகத்தில் பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், இந்த வரும் கொரோனா பரவலால் பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரிக்கான இறுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு
கொரோனா பாதுகாப்பு

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து கல்லூரித் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து மாணவர்கள் மத்தியிலும் அதிகமாகவே இருந்தது.

அதிகரிக்கும் இணையவழி நேர்முகத் தேர்வு! - எதிர்கொள்ளும் வழிகள்!

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயமாக நடத்த வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. தேர்வு நடத்த அனுமதி வழங்கி மத்திய உயர்கல்வி துறைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பிய பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவிட் -19 பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் நாள்காட்டி குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யு.ஜி.சி வெளியிட்டுள்ளது.

யுஜிசி
யுஜிசி

அதில், `இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் மாணவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, சம வாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பது முக்கியம். அதற்கு ஏற்றவாறு மத்திய குடும்பநலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். ஒரு இறுதியாண்டு மாணவர் தேர்வில் கலந்துக்கொள்ள முடியாவிட்டால், பல்கலைக்கழகம் அந்த மாணவருக்குச் சிறப்புத் தேர்வை ஏற்பாடு செய்ய வேண்டும். பழைய தேர்வுகள் எழுத வேண்டிய மாணவர்கள் அவர்களுக்கு இருக்கும் சாத்தியக்கூறு மற்றும் வசதிகளைப் பொறுத்து ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் கட்டாயமாக மதிப்பீடு செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு