Published:Updated:

``வெளிநாட்டில் படிப்பவர்களில் 90% பேர் இங்கு தேர்ச்சி பெறுவதில்லை!" - மத்திய அமைச்சர் பேச்சு

பிரகலாத் ஜோஷி

`வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் இந்தியர்களில் 90% பேர் இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை.' - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

``வெளிநாட்டில் படிப்பவர்களில் 90% பேர் இங்கு தேர்ச்சி பெறுவதில்லை!" - மத்திய அமைச்சர் பேச்சு

`வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் இந்தியர்களில் 90% பேர் இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை.' - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

Published:Updated:
பிரகலாத் ஜோஷி

உக்ரைனில் கடந்த ஆறு நாள்களுக்கும் மேலாக ரஷ்யப் படையினருக்கும், உக்ரைன் படையினருக்கும் போர் நடைபெற்றுவருகிறது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் போலந்து, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். மேலும் பல நாடுகள் உக்ரைனில் வாழும் தங்கள் நாட்டுக் குடிகளை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் வாழும் இந்திய மக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து உக்ரைன் சென்று படிக்கும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் அங்கு மருத்துவம் படிப்பது தெரியவந்துள்ளது.

அதனால், `ஏன் இந்திய மாணவர்கள் நம் நாட்டிலேயே படிக்காமல், உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கிறார்கள்?' என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது

மருத்துவம்
மருத்துவம்

இந்தச் சூழலில், கடந்த திங்களன்று இது குறித்துப் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் இந்தியர்களில் 90% பேர், இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறுவதில்லை. இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிப்பதற்காக ஏன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதிக்க இது சரியான நேரமும் அல்ல" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரகலாத் ஜோஷி
பிரகலாத் ஜோஷி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் இந்தப் பேச்சு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாகப் பணிபுரிய, `FMGE' எனப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism