Published:Updated:

தேசிய கல்விக் கொள்கை: சூர்யா கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் பதில்கள்!

வி.எஸ்.சரவணன்

தேசிய கல்விக் கொள்கை: சூர்யா கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் பதில்கள்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு மத்திய அரசால் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து மக்களின் கருத்துகளைத் தெரிவிக்க, ஜூன் 30 வரை அவகாசம் எனவிருந்தது. அந்தக் கால அவகாசம் போதாது எனப் பல தரப்பினரும் கோரிக்கை வைத்ததால், மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, தேசிய கல்விக் கொள்கை வரைவில் இருக்கும் அம்சங்களைக் கடுமையாக விமர்சித்தார். `30 கோடி மாணவர்களுக்கான கல்வித் திட்ட வரையறுப்பில் ஏன் இத்தனை அவசரம்?' எனக் கேட்டிருந்தார். அவர் முன் வைத்தவை என 10 கேள்விகள் ஊடகங்களில் பிரதானமாகப் பேசப்பட்டது. அந்தக் கேள்விகளுக்க பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன், விளக்கம் அளித்திருக்கிறார்.

வானதி சீனிவாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு கேள்வியும் அதற்கான தனது பதிலையும் போட்டோ கார்டு வடிவில் வெளியிட்டுள்ளார். உதாரணமாக, 'மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளைப் படிக்க முடியுமா?' என்ற சூர்யாவின் கேள்விக்கு, 'ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி 85 சதவிகிதம் அதன் ஆறு வயதிற்குள் நடைபெறுகிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அதை இந்த அறிக்கையிலும் அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே, 3 வயது குழந்தையால் மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக்கூட படிக்க முடியும் என்பதுதான் உண்மை' என்று பதில் அளித்திருக்கிறார் வானதி சீனிவாசன். இவரின் ட்விட்டர் பக்கத்தில் இதுவரை 7 கேள்வி - பதில்களைப் பதிந்துள்ளார்.