Published:Updated:
வாரத்தில் 6 நாள்கள் கல்லூரி... மக்கள் கருத்து என்ன?! #VikatanPollResults

கல்லூரி திறந்ததும் வாரத்தில் 6 நாள்கள் கல்லூரி... இது குறித்து மக்கள் கருத்து என்ன?! #VikatanPollResults
ஒரு வழியாக கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கல்லூரிகளைத் திறக்கவிருக்கிறார்கள். இதுவரை ஆன்லைனில் நடந்து வந்த வகுப்புகள் இனி வழக்கம்போல கல்லூரியில் நடக்கவிருக்கின்றன. அதே நேரம், இதுவரை வீணான நாள்களை ஈடுகட்ட, இனி வாரத்தில் 6 நாள்கள் (சனிக்கிழமையும் சேர்த்து) கல்லூரிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. கல்லூரிக்குச் செல்லப் பொதுப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கும் மாணவர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று இன்னமும் இருக்கும் நிலையில், கல்லூரிகளை 6 நாள்கள் திறப்பது ஆபத்தானது என ஒரு சாரர் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பு, இன்னும் எத்தனை நாள்கள் கல்வியைப் பலிகொடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.