சூர்யாவின் கருத்தும் நீதிமன்ற அவமதிப்பு சர்ச்சையும்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சூர்யாவின் கருத்து அமைந்திருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
நீட் தேர்வு அழுத்தத்தால் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதைக் கண்டித்து, நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சூர்யா. அதில் அவர், "கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது" என்று தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக, அவர் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தின் 6 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாகத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்.