Published:Updated:

10-ம் வகுப்பு தேர்வு: தமிழக அரசு அறிவிப்புக்கு முன் விகடன் சர்வேயில் மக்கள் கருத்து என்ன?#VikatanPollResults

10-ம் வகுப்பு தேர்வு
News
10-ம் வகுப்பு தேர்வு ( மாதிரிப் படம் )

10ம் வகுப்பு தேர்வு: தமிழக அரசு அறிவிப்புக்கு முன் விகடன் சர்வேயில் மக்கள் கருத்து என்ன?#VikatanPollResults

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, கொரோனா காலத்தில் இது ஆபத்து எனக் கூறி தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்குத் தமிழக அரசு, "தமிழகத்தில் வரும் மாதங்களில் 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தேர்வை நடத்த இதுவே சரியான நேரம்" என்று வாதாடியது.

இங்கே இப்படியிருக்க, தெலங்கானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இன்டர்னல் தேர்வுகளின் அடிப்படையில் கிரேடுகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இந்நிலையில், "தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?" என விகடன் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே தமிழக அரசு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதுவரை பதிவான வாக்குகள்படி ட்விட்டரில் கிடைத்த முடிவுகள்.
Vikatan Poll
Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.