Published:Updated:

`டிஜிட்டல் பல்கலைக்கழகம், Digital DESH' - பட்ஜெட் 2022-ல் கல்வி சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?

FM Nirmala Sitharaman

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கியுள்ள தொகை, ரூ.1,04,278 கோடி. இது முந்தைய 2021 - 22 பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட ரூ.11,054 கோடி அதிகம். சென்ற பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.93,224 கோடி.

`டிஜிட்டல் பல்கலைக்கழகம், Digital DESH' - பட்ஜெட் 2022-ல் கல்வி சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கியுள்ள தொகை, ரூ.1,04,278 கோடி. இது முந்தைய 2021 - 22 பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட ரூ.11,054 கோடி அதிகம். சென்ற பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.93,224 கோடி.

Published:Updated:
FM Nirmala Sitharaman

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். பிரதம மந்திரி இ -வித்யா திட்டம் விரிவாக்கம் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் வரை, நாட்டு வளர்ச்சியின் முக்கிய அங்கமான கல்விக்கு இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பற்றி இங்கு பார்ப்போம்.

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கியுள்ள தொகை, ரூ.1,04,278 கோடி. இது முந்தைய 2021 - 22 பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட ரூ.11,054 கோடி அதிகம். சென்ற பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.93,224 கோடி. அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் கல்விக்கு 11.86% நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman
AP Photo / Altaf Qadri

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறப்பம்சங்கள்...

* வேளான் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் இயற்கை விவசாயம், ஜீரோ-பட்ஜெட், நவீன விவசாயத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றிமைக்கப்படும்.

* மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொடுக்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். அதற்காக டிஜிட்டல் தேஷ் (Digital DESH) இ-போர்ட்டல் தொடங்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* கொரோனா சூழலால் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் வகையில், `ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி சேனல்' திட்டம் தொடங்கப்படும். பிரதம மந்திரி இ-வித்யா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போதுள்ள 12 சேனல்கள் 200 சேனல்களாக அதிகரிக்கப்படும்; 1 முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் பிராந்திய மொழிகளில் இணைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.

* தரமான ஆன்லைன் கன்டன்ட்கள் உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியில், ஆன்லைன் மெட்டீரியல்களைப் பயன்படுத்தி கற்பிக்க பயிற்சி அளிக்கப்படும்.

Education (Representational Image)
Education (Representational Image)
Pixabay

* 250 கோடி ரூபாய் செலவில், ஐந்து சிறப்பு மையங்கள் (Centres of Excellence) அமைக்கப்படும். இது நகர்ப்புற மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படும்.

* ராணுவ பட்ஜெட்க்கு உட்பட்டு, ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பணிகளுக்காக கல்வி நிலையங்களுக்கு ஊக்கமும், ஆதரவும் வழங்கப்படும்.

- வைஷ்ணவி பாலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism