Published:Updated:

பள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள்! - தமிழக அரசின் கடமைகள் என்னென்ன?

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின்போது வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விருப்பத்தின் அடிப்படையில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளி திறந்த சில தினங்களிலேயே கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் அதிகரிக்க மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகளை நடத்தாமலேயே மாணவர்கள் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

தற்போது கொரோனா தொற்று குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. பள்ளிகள், கல்லூரிகளில் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. ஆசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

பள்ளிகளைப் பொறுத்தவரை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. அதேசமயத்தில், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின. `மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தாமல் பள்ளிகள் திறக்கப்பட்டால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்’ என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர். ``நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும். தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்திருக்கிறது. பெற்றோர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம். மாணவர்கள் நேரடியாக வகுப்புக்கு வரக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறைகளில் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்களின் உடல் வெப்பநிலை தினமும் பரிசோதனை செய்து பதிவு செய்யப்படும். அரசுப் பள்ளி மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 800 மருத்துவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறந்ததும், பாடங்கள் நடத்தக் கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நாள்கள் மாணவர்களின் உளவியல் சிக்கல்களைப் போக்கப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் முதல் பொருளாளரால் வாடிய தலைவர் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கியதும் மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிக்கு வரும் மாணவர்களை இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்குக் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, கைகளைச் சுத்தம் செய்த பின்னர் அவர்கள் வகுப்புகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஒரு இருக்கையில் இரண்டு மாணவர்கள் மட்டும் அமர அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுக்குள்ள பொறுப்புகள் என்னென்ன என்பது குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ``தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல். சரியான கற்றல் செயல்பாடு என்பது பள்ளிக்கூடங்களில்தான் கிடைக்கும். நல்ல கற்பித்தல் என்பது உரையாடல்கள் மூலம்தான் நடைபெறும். இந்தச் சூழலில் மாணவர்கள் - ஆசிரியர்களிடையே உரையாடல் தேவை மிக அதிகம். நீண்ட நாள்கள் மாணவர்கள் எழுத்து, வாசிப்புப் பயிற்சிகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளை அவர்களிடம் ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தொடர்ந்து பேசியவர், ``எல்லாவற்றையும்விட முதன்மையாக, அவர்கள் மனநிலை என்ன என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உளவியல்ரீதியான பயிற்சிகள் வழங்கவேண்டியது அவசியம். அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமான கவனிப்பு மிக அவசியம். மாணவர்கள் மிக எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வார்கள். பள்ளிகள் மிகப் பாதுகாப்பாக நடைபெறுகின்றன என்ற எண்ணத்தை வழங்கினால் குழந்தைகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவார்கள். அதேபோல, ஒரு குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு