Published:Updated:

திருவாரூர்: கஜாவால் சேதமான அரசுப்பள்ளிக் கட்டடம்... வகுப்பறையான கோயில் கொட்டகை; விடிவுகாலம் எப்போது?

திருவாரூர் | தொடக்கப்பள்ளி

தமிழ்நாடு அரசாங்கம் பள்ளிக்கல்வித்துறைக்கு, `மிக முக்கியத்துவம்’ கொடுத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஒன்று 4 வருடங்களாக கோயில் கொட்டகையில் இயங்கி வருகிறது.

திருவாரூர்: கஜாவால் சேதமான அரசுப்பள்ளிக் கட்டடம்... வகுப்பறையான கோயில் கொட்டகை; விடிவுகாலம் எப்போது?

தமிழ்நாடு அரசாங்கம் பள்ளிக்கல்வித்துறைக்கு, `மிக முக்கியத்துவம்’ கொடுத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஒன்று 4 வருடங்களாக கோயில் கொட்டகையில் இயங்கி வருகிறது.

Published:Updated:
திருவாரூர் | தொடக்கப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி என்னும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. 2004-ல் கட்டப்பட்ட இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அதன் பிறகு 2018-ல் வீசிய கஜா புயலில் இப்பள்ளியின் கட்டடம் முழுமையாக சேதமடைந்ததால், அப்பள்ளி கட்டடமானது இடிக்கப்பட்டு, அருகிலிருந்த ஆலமரத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால், இன்று வரை அப்பள்ளிக்கூடத்துக்கு கட்டட வசதி என்பதே இல்லாமல் அருகில் உள்ள கோயிலின் பக்தர்கள் உடை மாற்றும் கொட்டகையில் தான் செயல்பட்டு வருகிறது.

கோயில் கொட்டகையில் திருவாரூர் அரசுப்பள்ளி
கோயில் கொட்டகையில் திருவாரூர் அரசுப்பள்ளி

தற்போது இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு சரியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் கிடையாது. அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் இருக்கக்கூடிய கருவேலங்காடுகளையே கழிப்பறையாக பயன்படுத்தக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அப்படி கழிப்பறைக்கு செல்லும் போது பாம்பு, தேள் போன்ற பூச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இப்பிரச்னை குறித்து பலமுறை பல்வேரு தரப்பினருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று கூறுகின்றனர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பேசிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ``நாங்க எல்லாரும் கூலி வேலை பார்த்து தான் எங்க புள்ளைங்கள இந்த பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கிறோம். ஆனா, கிட்டத்தட்ட நாலு வருசத்துக்கு மேல இந்த பள்ளிக்கூடத்துக்கு கட்டடமே இல்லாம இருந்துகிட்டு இருக்கு. 2018-ம் ஆண்டு கஜா புயல் வீசினப்போ இங்க இருந்த பள்ளி கட்டடம் மொத்தமாக சேதமடைஞ்சி போயிடுச்சு. அதனால் அப்ப இருந்த அரசு அதிகாரிகள், தற்காலிகமா கட்டடம் கட்டி தரவரைக்கும் மரத்து நிழல்ல வகுப்புகள நடத்துங்கன்னு சொன்னாங்க. ஆனா, இதுவரைக்கும் அரசாங்கம் தரப்பிலிருந்து இந்த பள்ளிக்கூடத்துக்கு கட்டடம் கட்டி கொடுக்கவே இல்ல. இப்போ பக்கத்துல இருக்கிற கோயில் கொட்டகையில தான் வகுப்பு நடந்துகிட்டு வருது.

கோயில் கொட்டகையில் அரசுப்பள்ளி
கோயில் கொட்டகையில் அரசுப்பள்ளி

அந்த கொட்டகை கோயிலுக்கு வர்ற, பக்தர்கள் உடை மாத்துறதுக்கும், பாத்திரம் மாதிரியான பொருள்கள் வைக்கிற குடோனா தான்இருந்துச்சு. ஆனா இப்போ அதுல தான் இந்த பள்ளிக்கூடம் நடந்துகிட்டு இருக்கு. எங்க புள்ளைங்களுக்கு சரியா ஒரு கழிப்பறை வசதி கூட கிடையாது. பக்கத்துல இருக்குற கருவ காட்ட தான் இந்த 50 புள்ளைகளும் பாத்ரூமா பயன்படுத்திகிட்டு வராங்க. சில நேரத்துல அந்த காட்டுல இருக்குற தேளு, பூரான் மாறியான பூச்சிகள் எங்க புள்ளைகள கடிச்சி கூட இருக்கு. இந்த பள்ளிக்கூடம் இப்போ நடந்துகிட்டுயிருக்க இந்த கோயில் கூட திருவாரூர் எம்.எல்.ஏ.வோட குலதெய்வ கோயில் தான். வாராவாரம் அவர் இந்த கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டு தான் போவாரு. இந்த பள்ளிக்கூடத்தோட நிலைம அவருக்கு நல்லாவே தெரியும். ஆனா, இதுவரைக்கும் அவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கல. நாங்களும் முதல்வர்லயிருந்து முதன்மை கல்வி அலுவலர் வரைக்கும் எல்லாருக்கும் மனு போட்டு பாத்துட்டோம். ஆனா, இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்ல. உடனடியா தமிழக அரசாங்கம் இந்த மேல்கொண்டாழி தொடக்கப்பள்ளிக்கு தற்காலிகமாவது ஒரு கட்டடத்தை அமைச்சி தரனும்னு கேட்டுகிறோம்” என்றனர்.

அப்பள்ளியில் படிக்கும் மாணவியின் தந்தை அருணகிரி என்பவர், ``என் பேரு அருணகிரி. விவசாய கூலி வேல தான் பாக்குறேன். என்னோட பொண்ணு இந்த பள்ளிக்கூடத்துல தான் நாலாவது படிச்சிட்டு இருக்கு. இந்த பள்ளிக்கூடத்துக்கு நாலு வருஷமா கட்டடமே கிடையாது. பக்கத்துல இருக்கிற கோயில் தகரக் கொட்டகையில தான் இப்போதைக்கு இந்த பள்ளிக்கூடம் நடத்துட்டு வருது.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி

இந்த பள்ளிக்கூடத்துக்குன்னு சரியா பாத்ரூம் வசதி கூட கிடையாது. பக்கத்துல இருக்குற கருவ காட்ட தான் இந்த புள்ளைங்கல்லாம் பாத்ரூமா பயன்படுத்திட்டு வருது. குடிக்க முறையான தண்ணீர் இல்லாம கோயில்ல ஒரு நாள் புடிச்சி வச்ச குடிதண்ணிய மூணு நாலு நாளைக்கு பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க. பள்ளிக்கூடம் கோயில் கொட்டகைல இருக்குறதுனால திருவிழா மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கும்போது இந்த பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுடுவாங்க. காலையும் மாலையும் இந்த கோயில்ல ரேடியோ செட் வேற பாடும். அப்பவும் இந்த பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுடுவாங்க. இப்படி இருக்கிறப்போ எப்படி இந்த பிள்ளைங்க இங்க படிப்பாங்க. நான் கூலி வேலை பார்க்கிறதுனாலதான் காசு இல்லாம அரசாங்க பள்ளிக்கூடத்துல என் புள்ளையை சேர்த்தேன். ஆனா, இப்ப இங்க படிக்கிற அத்தனை பிள்ளைகளளோட உயிருக்கே ஆபத்தா போய்டுமோம்னு பயமா ரொம்ப இருக்கு.” என்றார்.

திருவாரூர்: கஜாவால் சேதமான அரசுப்பள்ளிக் கட்டடம்... வகுப்பறையான கோயில் கொட்டகை; விடிவுகாலம் எப்போது?

இது குறித்து திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் அவர்களிடம் கேட்டபோது, ``மேல் கொண்டாழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்க்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் பள்ளி கட்டடமானது கட்டப்படும்” என்றார்.

தரமற்ற, முறையற்ற பள்ளிக்கூட கட்டடடங்களால் தான் 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலைய கட்டடங்களையும் சரி செய்யுமா இந்த அரசு..!