Published:Updated:

சாரண-சாரணியர் தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளது..! ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சாரண-சாரணியர் தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளது..! ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
சாரண-சாரணியர் தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளது..! ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தேசிய சாரண, சாரணியர் அமைப்புக்கானத் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டுள்ளது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சாரண-சாரணியர் தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளது..! ஹெச்.ராஜா குற்றச்சாட்டு


தமிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணியும் போட்டியிட்டார். இதில் மணி 232 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஹெச்.ராஜா, வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதுகுறித்து பேசிய அவர், 'சாரண-சாரணியர் இயக்கத்துக்கான தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளது. சாரண-சாரணியர் இயக்கத்தின் வழி முறைகளை தேர்தல் நடத்துபவர்கள் மீறியுள்ளனர். இந்த இயக்கத்தில் மாற்றம் தேவை என்று என்னை வற்புறுத்தியதால்தான் போட்டியிட்டேன்' என்று தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தேர்தல் அதிகாரி கலாவதி, தேர்தல் முறையாகத்தான் நடைபெற்றது என்று விளக்கமளித்துள்ளார்.