Published:Updated:

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்! காவல்துறையைக் கைகாட்டிய ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்! காவல்துறையைக் கைகாட்டிய ராஜேஷ் லக்கானி
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்! காவல்துறையைக் கைகாட்டிய ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்! காவல்துறையைக் கைகாட்டிய ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது, மாநில காவல்துறைதான் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது. இதனிடையே, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை தற்போதில்லை என்று ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்தக்கோரி, ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் என்று நம்புவதாகத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்ததோடு, வழக்கையும் முடித்துவைத்தது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக, முதல்வர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் வைரக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ் லக்கானி பதில் மனுத் தாக்கல்செய்தார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, மாநில காவல்துறைதான் வழக்குப்பதிவுசெய்து விசாரிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டிய பொறுப்பு, மாநகர காவல் ஆணையத்துக்குத்தான் உள்ளது. தவறு செய்தவர்கள்மீது சட்டப்படி தமிழக காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு