Published:Updated:

அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவார்கள்: சோனியா

அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவார்கள்: சோனியா
அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவார்கள்: சோனியா
அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவார்கள்: சோனியா

ராஜ்கோட்: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால்  விவசாயிகள் பயனடைவார்கள் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி  தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இதற்கான  தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது.

இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குஜராத்தில் இன்று தேர்தல்  பிரசாரத்தை தொடங்கினார். ராஜ்கோட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர்,"குஜராத்தின் வளர்ச்சி பணியில் காங்கிரஸ் எப்போதுமே பங்கேற்று  உள்ளது.ஏனென்றால் அம்மாநிலத்தில் வளர்ச்சி பாதையை தொடங்கி வைத்ததே  காங்கிரஸ் கட்சிதான்.காந்திய கொள்கையை பின்பற்றும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

##~~##
குஜராத் மாநிலத்தின் 50 சதவீத நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இதை மாநில  அரசு கூறியிருக்காது.பா.ஜனதா ஆட்சியை விட காங்கிரஸ் கட்சி அதிக உதவிகளை  செய்து வருகிறது.
அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். குஜராத்தில் உள்ள  விவசாயிகள் இதனால் பயன்பெறுவார்கள்.குஜராத்துக்கு தேவையான அனைத்து  உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.அப்படி இருக்கும்போது எதற்காக  மாநில அரசு வாட்வரியை குறைக்காமல் இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்.ஊழல் விவகாரத்தில் பாரதிய  ஜனதா இரட்டை வேடம் போடுகிறது.அக்கட்சி நாடாளுமன்றத்தில் லோக்பால்  மசோதாவை கொண்டுவரவில்லை.பா.ஜனதா கட்சி ஊழலுக்கு எதிராக  இல்லை;எங்களுக்கு எதிராகத்தான் உள்ளது.பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற  விடாமல் அக்கட்சி முடக்கியது” என்றார்.