Published:Updated:

சோனியா காந்தி குற்றச்சாட்டு: நரேந்திர மோடி எச்சரிக்கை!

சோனியா காந்தி குற்றச்சாட்டு: நரேந்திர மோடி எச்சரிக்கை!
சோனியா காந்தி குற்றச்சாட்டு: நரேந்திர மோடி எச்சரிக்கை!
சோனியா காந்தி குற்றச்சாட்டு: நரேந்திர மோடி எச்சரிக்கை!

மாண்ட்வி: குஜராத் அரசு பற்றி அவதூறாக பேசினால் வழக்கினை சந்திக்க நேரிடும்  என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி  எச்சரிக்கை

குஜராத் மாநிலம் மாண்ட்வியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  சோனியாகாந்தி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,"குஜராத் மாநிலத்தில்,  விவசாயிகளுக்கு மோடி அரசு ஒன்றும் செய்யவில்லை; மத்திய அரசு கோடி கோடியாக  நிதி அளித்தும் அந்த நிதி எங்கே சென்றது எனதெரியவில்லை. விவசாயிகளின்  கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து சலுகை வழங்கியது. ஆனால், மோடி  இதனை மறைக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
 

##~~##
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நரேந்திர மோடி,"எங்கள் மாநில விவசாயிகள் கடுமையான  உழைப்பாளிகள்; கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் பருத்தி விவசாயிகளின்  கடுமையான உழைப்பினால் 23 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 10  ஆண்டுகளி்ல் இதுவ‌ரை 1.23 லட்சம் கோடி பருத்தி பேல்களை உற்பத்தி செய்து  ஏற்றுமதி செய்துள்ளோம்.
 
ஆனால் காங்கிரஸ் அரசு பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் எங்கள்  மாநிலத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வெறும் ஓட்டு வங்கிக்காக  பொய்யான தகவலை தரவேண்டாம். தேர்தல் நேரம் என்பதால் மக்களை ஏமாற்ற ‌எனது  அரசு பற்றி அவதூறாக பேச வேண்டாம். இல்லையெனில் வழக்கினை சந்திக்க  நேரிடும்”என்று கூறியுள்ளார்.