`தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி - குலாம்நபி ஆசாத் அறிவிப்பு' என்ற அறிவிப்பு, பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியானது. இவர்கள் எப்போது பிரிந்திருந்தார்கள்... மீண்டும் சேர்வதற்கு?
`மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?’ என்ற காதலர் தின ஊடலைப்போலவே இருந்தது காங்கிரஸ் தலைவர்களை, கருணாநிதி தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு கட்சிகளும் சண்டை போட்டுக் கொள்வதுபோல ஊர் உலகத்துக்கு இதுவரை காட்டிக்கொண்டிருந்தார்கள்; இப்போதுதான் உடன்பாடு ஏற்பட்டதுபோலவும் காட்டிக் கொள்கிறார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கிய தி.மு.க - காங்கிரஸ் நட்பு, இடையில் ஒரே ஓர் ஆண்டைத் தவிர நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருந்தது.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இது முதன்முதலாகப் பூத்தது. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்தது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கூட உடைய வில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பலமாக இருந்தது. ஆனால், போன நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வேண்டுமென்றே தன்னை காங்கிரஸிடம் இருந்து வலுக்கட்டாய மாகப் பிரித்துக்கொண்டது அல்லது பிரித்துக் கொண்டதாக நடித்தது. இதோ 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டு. ஒரு காலத்தில் காங்கிரஸுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான் பந்தம் அதிகம். இப்போது கருணாநிதிக்கும் காங்கிரஸுக்கும் செம கெமிஸ்ட்ரி.

கருணாநிதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்ன பேசினார்? `காங்கிரஸ் நமக்குத் துரோகம் செய்துவிட்டது’ என்றார். ‘ராகுல், மோடி ஆகியோர் பிரதமராக நமது ஆதரவு இல்லை’ என, கையை விரித்தார்.

`ஈழப் பிரச்னையை, அன்றைய காங்கிரஸ் மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை’ என்றும், `ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் காங்கிரஸ் அரசு கைதுசெய்தது’ என்றும் 2013-ம் ஆண்டில் திடீர் ஞானோதயம் வந்தது கருணாநிதிக்கு.

தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதியின் கர்ஜனையை இன்று படித்தாலும் உடம்பு புல்லரிக்கும்.

`தி.மு.க தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப் படுத்துகிற காங்கிரஸ்காரர்களைப் போல நன்றி மறந்து செயல் படுபவர்களுடன் கூட்டணி வைக்காது.

` `சைபர்... சைபர்... என ஏழு சைபர் போட்டு ஆயிரம் லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது' எனச் சொல்லி, `அதற்கு எல்லாம் யாரும் காரணம் அல்ல. ஒரே ஒரு நபர்தான்... ராசாதான்' என நம்முடைய தம்பி ராசாவை சிறையில் வைத்து, இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராசா மாத்திரம் அல்ல, என் மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறையிலே வைத்து வாட்டி இன்னமும் வழக்கு நடக்கிறது. குற்றமே செய்யாதவர்களைக் குற்றவாளியாக சி.பி.ஐ மூலமாகக் கூண்டிலே ஏற்றினார்கள் என்றால், அந்த சி.பி.ஐ யாருடைய கை வாள், யாருடைய கையிலே இருந்த கடிவாளம், சி.பி.ஐ யார் கையிலே இருந்த ஆயுதம்?’ என கருணாநிதி கர்ஜித்தபோது பொதுக்குழு உறுப்பினர்கள் நெக்குருகிப்போனார்கள். `இத்தகைய கொடூர காங்கிரஸோடு கூட்டணி கூடாது' எனக் தொண்டர்களை நினைக்க வைத்தார் கருணாநிதி.

முழுமையாக மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இதோ குலாம்நபி ஆசாத் கோபாலபுரம் வீட்டு வாசலில் நின்று, ‘காங்கிரஸுக்கு மிகவும் நம்பிக்கை யான கூட்டணிக் கட்சியாக
தி.மு.க இருந்துள்ளது’ என்கிறார்.

ஆ.ராசாவையும் கனிமொழி யையும் சிக்கவைத்துவிட்டார்களே என்ற ஆத்திரம் அன்று கருணாநிதியை அப்படிப் பேசவைத்தது. மன்மோகனையும் ப.சிதம்பரத்தையும் இதோடு சிக்கவைத்துவிடக் கூடாது என்ற தந்திரம் இன்று காங்கிரஸை இப்படிச் செயல்படவைக்கிறது.

`பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவருக்கும் தெரியாமல் நான் எதையுமே செய்யவில்லை’ என மேடைகளில், பேட்டிகளில், நீதிமன்றத்தில் சொல்லிவருகிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. இதை ராசா மாதிரி வெளிப்படை யாகச் சொல்லாவிட்டாலும், கருணாநிதி தனக்கே உரிய நாடக பாணியில் சொல்லத் தவறவில்லை.

` `நம்மை விட்டால் சரி' என்ற அளவுக்கு பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே இருந்தவர்கள் எல்லாம் தப்பினால் போதும் என்ற நிலைமையில்... மாட்டிய வர்கள், சிக்கியவர்கள்தான் குற்றவாளிகள் என ராசாவையும் கனிமொழியையும் சிறையிலே வைத்து வாட்டினார்களே... இது யாருடைய ஆட்சியில்? எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றி யிருக்கிறோம் எனக் காப்பாற்றப் பட்டவர்களுக்குத் தெரியும்’ என்றும் கருணாநிதி அப்போது சொன்னார். காயம்பட்டவர்களும் காப்பாற்றப்பட்டவர்களும் சேர்ந்து மீண்டும் அமைத்துள்ள கூட்டணி இது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்துடன் சேர்ந்து ஈழப் பிரச்னையையும் கருணாநிதி அன்று காரணமாகச் சொன்னார்.

`இலங்கைப் பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். போரை நிறுத்திவிட்டதாக மத்திய அரசுக்கு இலங்கை அரசு தெரிவித்தது. அதை மத்திய அரசு நம்பி எனக்குத் தெரிவித்தது. அதை நம்பி, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக நான் தெரி வித்தேன்’ என்றும் கருணாநிதி சொன்னார். கருணாநிதியை யாராலும் நம்பவைக்க முடியும் என்பதே கதை. ஆனால், அவர் மக்கள் மத்தியில் அதைச் சொல்லி நம்பவைக்க முயற்சித்தார்.

சொந்தப் பிரச்னையிலும் ஓர் இனத்தின் சோகப் பிரச்னையிலும் தன்னை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள அன்று வெட்டிக்கொண்ட கருணாநிதி, இன்று மீண்டும் பதவிக்கு வர, வெட்டியதை ஒட்டிக்கொண்டுவிட்டார். பணமும் பாவமும், சேர்ந்தும் இருக்க விடாது; நிரந்தரமாகப் பிரியவும் விடாது. அன்று காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் பதவி விலகினாலும் ரயில்வே குழுத் தலைவர் பதவியில் டி.ஆர்.பாலு தொடர்ந்தார். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்றாலும் கனிமொழியை மாநிலங்களவைக்கு அனுப்ப, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் கேட்டு வாங்கப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் நடத்திய பேரணியில், தி.மு.க எம்.பி-யான திருச்சி சிவா பங்கேற்றார். எனவே மறைமுக நட்பு தொடர்ந்தது. இப்போது வெளிப்படையாகவே வந்துவிட்டது.

`ஆட்சியில் பங்கு கேட்போம்’ என முதலில் சீறினார் இளங்கோவன். `காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது’ என்றும் கர்ஜித்தார். `தனித்துப் போட்டி’ என்றார். `234 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும்’ என்றார். `ராகுல் காந்தி தமிழக முதலமைச்சர்’ என்று எல்லாம் சொல்லிப் பார்த்தார். கருணாநிதி காலில் இரண்டொரு முறை விழுந்தவர்தான் இளங்கோவன் என்றாலும், காலை வாரவும் தயங்காதவர் என்பதால், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், சுருக்கமான நேரத்துக்குள் பேசி முடித்ததற்குக் காரணம் சுப்பிரமணியன் சுவாமி.

தி.மு.க - தே.மு.தி.க - பா.ஜ.க என்ற புதிய சூத்திரத்தோடு ‘சங்கராச்சாரியார் கைது' என்ற பழைய கணக்கைத் தீர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார். ஜெயலலிதாவை வீழ்த்து வதற்காக சுவாமி எதையும் செய்வார் என்பதால், உடனடியாக குலாம்நபி ஆசாத் அனுப்பி வைக்கப்பட்டார். பேச்சுவார்த்தைகளை சுமுகமாக நடத்துவதில் ‘அகில இந்திய ஆற்காடு வீராசாமி' எனப் பெயரெடுத்தவர் ஆசாத்.

தி.மு.க தலைமையில் ஆட்சி அமைப்பதுதான் முதல் இலக்கு. ஆட்சியில் பங்குபெறுவது என்பதும், பங்குபெறாமல் இருப்பது என்பதும் சிறிய பிரச்னை ஆகும். இந்தக் கூட்டணியில் யாரைச் சேர்க்கலாம் என்பதை முதன்மைக் கட்சியான தி.மு.க-வே முடிவுசெய்யும்' என மொத்த அடிமை சாசனத்தையும் ஆசாத் எழுதிக்கொடுப்பார் என்பது கருணாநிதிக்கே ஆச்சர்யம். அவர்களது இலக்கு, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அல்ல; 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான அணிச் சேர்க்கையாகத்தான் இதைப் பார்க்கிறார்கள்.

கருணாநிதியும் காங்கிரஸை உடனடியாக வரவைத்து சம்பந்தம் பேசியதற்குக் காரணம், இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் விஜயகாந்துக்கு நெருக்கடி கொடுப்பதற்குத்தான். தே.மு.தி.க வராவிட்டாலும் எங்களால் அதை இட்டு நிரப்ப முடியும் என்பதை விஜயகாந்துக்கு உணர்த்த நினைத்தார் கருணாநிதி. `விஜயகாந்த் வந்தால் போதும்' என நினைத்த கருணாநிதிக்கு, அவர் வராவிட்டாலும் சமாளிக்கலாம் என்ற புத்துணர்வை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தி யிருக்கிறது. விஜயகாந்தே வந்தாலும் அது தி.மு.க-வுக்கான இரண்டாவது வரவாகத்தான் இருக்கும்.

தே.மு.தி.க-வும் காங்கிரஸும் சம செல்வாக்குக் கொண்ட கட்சிகள் அல்லதான். காங்கிரஸ் கட்சிக்குத் தொண்டர்களின் பலம் குறைவு என்றாலும், தேசிய எண்ணம்கொண்ட மக்களின் வாக்கு வங்கி உண்டு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., மூன்று இடங்களில் வென்றது. காங்கிரஸ் ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. விடுதலைச் சிறுத்தைகளாலும் அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. 63 இடங்களில் போட்டியிட்டதன் மூலமாக 9.3 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. இப்போது த.மா.கா உருவாகிவிட்டது என்றாலும், தி.மு.க-வின் தென்மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கோரஸாக, ‘காங்கிரஸ் நம்முடைய அணியில் இருந்தால் நல்லது' எனச் சொன்னார்கள். காங்கிரஸைச் சேர்த்ததன் மூலமாக தென்மாவட்ட தி.மு.க உற்சாகம் அடைந்துள்ளது. த.மா.கா விலகலால் சோர்ந்திருந்த காங்கிரஸும் தெம்பு பெற்றுள்ளது.

பரஸ்பர உள்நோக்கத்தோடு பழைய ஆயுதத்தைத் தூசிதட்டி எடுத்துள்ளார் கருணாநிதி. மற்றவர்களை அழவைத்துக்கொண்டு இருந்த விஜயகாந்த் கண்ணை இது முதன்முதலாக உறுத்த ஆரம்பித்துள்ளது!

விஜயகாந்தம்!

ஒரு கட்சிக்கு இத்தனை மவுசு எந்தத் தேர்தலிலும் வந்தது இல்லை. அப்படி ஒரு ‘செல்வாக்கை’ விஜயகாந்த் அடைந்துள்ளார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்ற விஜயகாந்த், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்றார். அவருக்கு 41 தொகுதிகளைத் தூக்கிக் கொடுத்தார் ஜெயலலிதா.

24 தொகுதிகளையே தி.மு.க வென்றதால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் விஜயகாந்துக்குப் போனது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விஜயகாந்தின் செல்வாக்கு இன்னும் கூடியது. தே.மு.தி.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க ஆகிய நான்கு கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மோடி அலை வீசிய தேர்தலில், அதிகப்படியாக 14 தொகுதிகள் தே.மு.தி.க-வுக்குத் தரப்பட்டன. இந்தக் கூட்டணியில் தருமபுரியில் அன்புமணியும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டுமே வென்றார்கள். ஆனால் இந்தக் கூட்டணி, சுமார் 75 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க., தி.மு.க இல்லாத ஒரு கூட்டணி, முக்கால் கோடி வாக்குகளை வாங்கியதே பெரிய சாதனையாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிறது.

தனித்து நிற்கும்போது, 8 சதவிகித வாக்குகளை வாங்கியிருந்தார் விஜயகாந்த். அப்போது அவர் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவந்தார். அந்த இரண்டு கட்சிகளையும் பிடிக்காத வாக்காளர்கள், அவர்களுக்கு விஜயகாந்தைப் பிடிக்காவிட்டாலும் வேறு வழி இல்லாமல் வாக்களித்தார்கள். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடனும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்னும் சில கட்சிகளுடனும் கூட்டணி வைத்த விஜயகாந்துக்கு, பழைய செல்வாக்கு அப்படியே முழுமையாக இருக்கிறது எனச் சொல்ல முடியாது. `தமிழ்நாட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவருக்கு அதே பழைய செல்வாக்கு இருக்கும்' எனச் சொல்லப்படுகிறது. எனவே, அவரை தங்களது கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் வாக்குகளைக் கூட்டி வெற்றிக்கு வழி ஏற்படுத்திக்கொள்ள எல்லா கட்சிகளும் துடிக்கின்றன.

இதில் முதல் தூது, பா.ஜ.க சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், மோகன்ராஜுலு போன்றோர் அடிக்கடி போய் விஜயகாந்தைப் பார்த்தார்கள். ‘ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், விஜயகாந்தை நானே அழைத்து வரத் தயார்’ என்ற ரீதியில் சுப்பிரமணியன் சுவாமி சொன்னார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரும் விஜயகாந்தைச் சந்தித்துவருகிறார்.

விஜயகாந்துக்கு, பகிரங்க அழைப்புவிடுத்தார் கருணாநிதி. அதை இரண்டு மூன்று முறை வழிமொழிந்தார் ஸ்டாலின். அவரது மருமகன் சபரீசன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் விஜயகாந்தைச் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்கள். ‘விஜயகாந்த் எங்கள் அணிக்கு வரவேண்டும். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்’ என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார். ‘விஜயகாந்துடன் நான் பேசுவேன்’ என குஷ்புவும் சொல்லியிருக்கிறார். இந்த அளவுக்கு விஜயகாந்தின் செல்வாக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்குமே பிடிகொடுக்காமல், `பிப்ரவரி 20-ம் தேதி, காஞ்சிபுரம் மாநாட்டில் அறிவிப்பேன்' என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அங்கும் அவர் வெளிப்படையாக அறிவிப்பார் எனச் சொல்ல முடியாது. `மார்ச் முதல் வாரம் வரை அவர் இழுக்கலாம்' எனச் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க-வை எதிர்கொள்ள, தி.மு.க-வுக்கு ஐந்து அல்லது ஆறு சதவிகித வாக்குகள் கூடுதலாக இருந்தால் போதும். அதை விஜயகாந்தை வைத்து நிரப்ப தி.மு.க நினைக்கிறது. `விஜயகாந்த் வந்தால், தங்களது கூட்டணியின் வாக்கு சதவிகிதம் கூடும்' என மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் நினைக்கிறார்கள். `அ.தி.மு.க தங்களைச் சேர்க்காத நிலையில், தே.மு.தி.க-வுடன் சேர்ந்தால் மட்டுமே மரியாதைக்குரிய கூட்டணியை அமைத்ததாக மதிக்கப்படும்' என பா.ஜ.க நினைக்கிறது. எனவே, சுற்றிவளைத்துப் பார்த்தால் அனைவரும் தங்களது வசதிக்காக விஜயகாந்தை அழைக்கிறார்கள்.

விஜயகாந்த் தனக்கு வசதியான கூட்டணி எது என்ற முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார் அல்லது தெளிவு அடைந்துவிட்டு இழுக்கிறார்!