Published:Updated:

3-வது முறையாகவும் ஆட்சியை பிடிப்போம்: மோடி நம்பிக்கை

3-வது முறையாகவும் ஆட்சியை பிடிப்போம்: மோடி நம்பிக்கை
3-வது முறையாகவும் ஆட்சியை பிடிப்போம்: மோடி நம்பிக்கை
3-வது முறையாகவும் ஆட்சியை பிடிப்போம்: மோடி நம்பிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று  முதலமைச்சர்  நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள 95 சட்டசபை தொகுதிகளில்,இன்று 2ம் கட்ட தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது.பிற்பல 3 மணி நிலவரப்படி சராசரியாக 54 சதவீதம் வாக்குகள்  பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்படுவதால், பா.ஜ.வுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ள்தாக  அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளன.

##~~##
இந்நிலையில்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மணி நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்  சாவடியில் இன்று வாக்களித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி,"இந்த தேர்தலின் மூலம்,  3வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கும் குஜராத்  மக்களுக்கு நாள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கூடியிருக்கும் மக்களின்  உணர்வை வைத்து இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடிகின்றது"என்றார்.
இதனிடையே இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில்,  வாக்கு எண்ணிக்கை வருகிற 20 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.அன்று  பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.