Published:Updated:

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  36 இடங்களில் முன்னிலை பெற்று,  பா.ஜனதாவிடமிருந்து  ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 
 
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின்  பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை  தேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி  இருந்தது.
 

##~~##
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில்  பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க.  வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை  பெற்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி  அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.
 
68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 36   தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி  அமைக்கிறது.
பா.ஜனதா 26 இடங்களிலும்,   மற்ற கட்சிகள் 6  இடங்களிலும்  வெற்றி பெறறு  உள்ளன.