Published:Updated:

ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி; 26 ஆம் தேதி பதவி ஏற்பு!

ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி; 26 ஆம் தேதி பதவி ஏற்பு!
ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி; 26 ஆம் தேதி பதவி ஏற்பு!
ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி; 26 ஆம் தேதி பதவி ஏற்பு!

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை  தொடர்ந்து,  இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி.

குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜனதா கட்சி தொடர்ந்து  3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பா.ஜனதா 115 இடங்களை கைப்பற்றியது.  காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான  தேசியவாத காங்கிரஸ் 2 இடத்திலும், ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், கேசுபாய்  படேலின் புதிய கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி  பெற்றுள்ளது.
 

##~~##
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பா.ஜனதா 2 இடங்கள் குறைவாகவும், காங்கிரஸ் 2  இடங்கள் கூடுதலாகவும் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. வருகிற 26 ஆம் தேதியன்று நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழா  நடைபெற உள்ளது.
அகமதாபாத் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில், பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக  நடத்த ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
 
முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  நடக்கிறது.இதில் நரேந்திர மோடி முறைப்படி பா.ஜனதா சட்டசபை கட்சி தலைவராக  தேர்ந்து எடுக்கப்படுகிறார்.
 
பதவி ஏற்பு விழாவில் பாஅத்வானி,சுஷ்மா சுவராஜ்,அருண் ஜெட்லி உள்ளிட்ட பல மூத்த  தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
 
அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட  கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.