Published:Updated:

மாற்றப்படுகிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி?

மாற்றப்படுகிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி?
மாற்றப்படுகிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி?

மாற்றப்படுகிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி?

தமிழகத் தேர்தல் அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத் தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் அதிகாரியாக மாறுதல் ஆனதையடுத்து, தமிழகத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி,  நவம்பர் 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலை அவர் நடத்தினார். பொதுத்தேர்தலின்போது நிறுத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தல்களையும் திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பணப் பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவிட்டு, மீண்டும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலையும் நடத்திமுடித்தார். ஜனாதிபதி தேர்தல், துணை ஜானாதிபதி தேர்தல் ஆகியவற்றையும் அவர் நடத்தினார். 

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து அவரை மாற்றிவிட்டுப் புதிய அதிகாரி ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயலாளர்களில் ஒருவரான சிவ்தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளராக இருக்கும் கார்த்திக், சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றுக் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சத்ய பிரத சாகு ஆகிய மூவர் பெயர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைசெய்திருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, சத்ய பிரத சாகு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். விரைவில் தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரிகுறித்த அறிவிப்பு வர இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு