`93 வயதாகிவிட்டது, இனி அவரால் முன்புபோல ஊரெல்லாம் சுற்றி பிரசாரம் பண்ண முடியாது, சென்னையில் மட்டும்தான் பேசுவார், அவரால் மேடையேறி முன்புபோல முழங்க முடியாது' என எதிர்க் கட்சிகள் நினைக்க, உடன்பிறப்புகளே கவலைப்பட்ட, அத்தனையையும் பொய்யாக்கி அதிரடியாக பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி. சென்னையில் தொடங்கி, கடலூர், திருவாரூர் வழியாக மே 14-ம் தேதி வரை இரண்டு கட்டமாக அடுத்த 15 நாட்களுக்கு கலைஞர் எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது.

ஏப்ரல் 23-ம் தேதி மதியம் தன் கோபாலபுரம் வீட்டில் இருந்து பிரசாரத்துக்குக் கிளம்பிய கருணாநிதியை நாள் முழுக்கப் பின்தொடர்ந்தோம்...

மதியம் 1 மணியில் இருந்தே கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வெளியே தொண் டர்களும் பெண்களும் மீடியாவும் குவிந்திருந்தனர். வீட்டுக்கு வெளியே காது கிழியும் அளவுக்கு பேண்டு வாத்தியங்களும் மேளதாளங்களும் முழங்கின. எல்லோர் முகத்திலும் அவ்வளவு உற்சாகம். கருணாநிதி எப்போது புறப்படுவார் என 101 டிகிரி வெயிலிலும் தொப்பலாக நனைந்திருந்த தொண்டர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

கருணாநிதியை நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்ல கைகளில் பெரிய பெரிய பூச்செண்டு களுடன் தலைவர்களும் உறவினர்களும் உள்ளே செல்வதும் வருவதுமாக இருந்தனர்.

கருணாநிதியின் ஸ்பெஷல் பிரசார வேனுக்கு `சாரதி' ரமேஷ். `‘அய்யாவுக்கு நான் 2003-2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்து டிரைவராக இருக்கேன். பிரசாரத்துக்குச் செல்லும்போது கான்வாயில் எவ்வளவு வேகமாகப் போனாலும் எதுவும் சொல்ல மாட்டார். சில சமயம் 140 கிலோமீட்டர் வேகத்துலகூட போகவேண்டியிருக்கும். அப்போதும் ஏதாவது புத்தகம் படிச்சுட்டே வருவார். என்கிட்ட அரசியல் எல்லாம் பேசினதே கிடையாதுங்க” என்றார். வேனின் டயர்களையும் வேனையும் அந்த ஒரு மணி நேரத்தில் 10 முறைக்கும் மேல் சோதனை செய்துகொண்டார்.

கருணாநிதி சரியாக 4:15 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வர... மதியத் தூக்கம் போட்டுக்கொண்டிருந்த கோபாலபுரவாசிகள் அதிர்ந்து எழுந்திருந்தார்கள். அந்த அளவுக்கு வேட்டுச்சத்தமும் மேளச்சத்தமும் தொண்டர் களின் வாழ்த்தும் ஏரியாவை நிரப்பின. முகத்தில் அவ்வளவு சந்தோஷம், புன்னகை முகத்துடன் வெளியே அழைத்துவரப்பட்டார். வீட்டுக்கு முன்னால் அண்ணா வேடமும் பெரியார் வேடமும் அணிந்து சிறுவர்கள் இருவர் நிற்க, அவர்கள் இருவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, பேரன் தயாநிதி மாறனுடன் காரில் ஏறிக்கொண்டார்.

சைதாப்பேட்டையில் நல்ல கூட்டம். இரண்டு பக்கங்களும் சாலைகளை மனிதத் தலைகள் நிறைத்திருந்தன. உடன்பிறப்புகள் முகத்தில் அவ்வளவு பூரிப்பு. `தலைவர் சைதாப் பேட்டையில் இருந்து கிளம்பினார்னா கட்டாயம் வெற்றிதான்... எங்க ஏரியா ராசி அப்புடிண்ணே' என்று ரொம்பவே பாசிட்டிவாக இருந்தனர் உடன்பிறப்புகள். தன் சொந்தத்தொகுதி என்பதால் கருணாநிதி வருகைக்காக மா.சுப்ரமணியன்தான் முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

கருணாநிதி செல்லும் இடம் எல்லாம் அவர் என்ட்ரி ஆகும் தருணங்களில் ‘செம்மொழியான தமிழ்மொழியாம்...’ பாடல்தான் ஒலித்தது.

மேடை ஏறும் வரை டல்லாக இருந்தவர் மேடை ஏறியதும் முகத்தில் அத்தனை உற்சாகம் காட்டுகிறார். கைகளை விரித்து உதயசூரியன் சின்னத்தைக் காட்டிக்கொண்டே ஒட்டுமொத்த கூட்டத்தையும தன் பார்வையாலேயே அளக்கிறார். பேசுவதற்கு முன்பு நேரம் பார்த்துக் கொள்கிறார். எல்லோருக்கும் கை காட்டி உற்சாகம் கூட்டுகிறார். ``என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...'' என்று அவர் சொல்ல, அத்தனை நேரமும் அமைதியாக இருந்த தொண்டர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

டிசம்பர் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப் பட்ட பகுதி சைதாப்பேட்டை. அதனாலேயே அதை ஒட்டி நிறையப் பேசினார். ‘`வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோது காப்பாற்றாத ஒரு மகாராணியின் ராஜ்ஜியத்தை எவ்வளவு நாளைக்கு அனுபவிப்பது? சூதாட்ட - சூழ்ச்சிக்கார அ.தி.மு.க அரசை விரட்டிட மாற்றத்தைத் தாருங்கள்’’ என்றார். அவருடன் தயாநிதி மாறன் மட்டும் மேடையில் அமர்ந்திருந்தார். கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பலரும் நின்றிருந்தனர். ஸ்டாலின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் மக்களிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ்.

கருணாநிதி மேடையில் முழங்கிக் கொண்டிருக்க, தன் கார் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் கருணாநிதியின் ஆஸ்தான மருத்துவர் கோபால். அவரிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தோம். ‘`விராட் கோஹ்லி மாதிரி ஃபுல் ஃபார்ம்ல இருக்கார். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்ததைவிட இப்போ இன்னும் ஸ்ட்ராங்கா, ஹெல்த்தியா இருக்கார். இந்த முறை பிரசாரத்துல அடிச்சு தூள் கிளப்புவார் பாருங்க’’ என்றார் உற்சாகமாக.

சைதாப்பேட்டையில் பிரசாரத்தை முடித்தவர், அங்கு இருந்து மரக்காணத்துக்குப் புறப்பட்டார். அங்கே வேனில் பிரசாரம். அதனால் காரில் இருந்து பிரசார வேனுக்குள் சென்றுவிட, அவரோடு ராஜாத்தி அம்மாள், தயாநிதி மாறன், கனிமொழி, எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், சண்முகநாதன் என ஒரு பெரிய பட்டாளமே துணைக்குச் சென்றது. போகும் வழியிலேயே அடுத்த கூட்டத்தில் பேசுவதற்கான மைக்கை வாங்கி சரிபார்த்துக்கொள்கிறார். கூடவே வேனுக்குள்ளேயே தன்னோடு இருப்பவர்களோடு ஒரு செல்ஃபியை எடுத்து உடனுக்குடன் ஃபேஸ்புக்கில் போடச் சொல்கிறார்.

மரக்காணத்துக்கு 7:30 மணி அளவில் வந்தவர், சரியாக மூன்று நிமிடங்களுக்கு உரையாற்றிவிட்டு புதுச்சேரி புறப்பட்டார். ‘என்னய்யா, தலைவரைப் பார்க்க காலையில இருந்து நின்னுட்டு இருக்கோம். அதுக்குள்ள கிளம்பிட்டாரே... முழுசா முகத்தைக்கூடப் பார்க்க முடியலையே’ என வருத்தத்துடன் தொண்டர்கள் பேசிக்கொண்டிருக்க, `விட்றா வண்டிய புதுச் சேரிக்கு... அங்கே போய் பாத்துக்கலாம்’ என சிலர் பைக்கில் புதுச்சேரிக்குப் பறக்க ஆரம்பித்தனர்.

புதுச்சேரிக்குள் கார் நுழைந்த இடத்தில் இருந்து இரு புறங்களிலும் தொண்டர்கள் குவிந்து நின்றனர். கருணாநிதியைப் பார்த்து உற்சாகமாகக் கை அசைத்தனர். இரவு 8 மணிக்கு புதுச்சேரி அண்ணா திடலில் கருணாநிதி பேசுவதாக இருந்தது. ஆனால் கட்சி நிர்வாகிகள், மதியம் 5 மணிக்கே பெண்களை பிரசார மைதானத்துக்கு அழைத்துவந்துவிட்டனர். 8 மணி வரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்கள் கடுப்பாகி, கட்சி நிர்வாகிகளைத் திட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். அதனாலேயே முழுக்க ஆண்கள் கூட்டம் மட்டுமே.

9.15 மணிக்கு, திடலுக்கு வந்தார் கருணாநிதி. மேடையில் மொத்தமாக ஐந்து ஏர்கூலர்கள்தான் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஏர்கூலர்களுக்கும் கருணாநிதிக்கும் இடையே 50 பேர் சுற்றி அமர்ந்திருந்தனர்.

கருணாநிதி ``என்னால் அதிக நேரம் பேச முடியாது, என் தொண்டை ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக என் தொண்டை நான் நிறுத்திக்கொள்ள மாட்டேன்’’ எனப் பேச, மைதானம் கரவொலியில் அதிர்ந்தது. புதுச்சேரி என்பதால் முந்தைய ஆட்சி, ஜெயலலிதா பற்றியெல்லாம் அதிகம் பேசாமல் `ஆட்சி மாற்றத்தை இளைஞர்களால்தான் தர முடியும், இளைஞர் சக்தி எத்தகையது' என்று பொதுவான டாப்பிக்கில் பேசினார்.

பேசி முடித்ததும் மேடையில் இருந்து சக்கர நாற்காலியில் கருணாநிதியை இறக்கிக் கொண்டிருக்க, இரு பக்கங்களும் இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு செல்போனில் படம்பிடிக்க, அதை உற்சாகமாகப் பார்த்துக்கொண்டே கை அசைத்துக்கொண்டிருந்தார். ஓர் இளைஞர் ‘தலைவா... ஸ்மைல் ப்ளீஸ்!’ எனக் கத்த... அத்தனை இரைச்சலிலும் அந்த இளைஞருக்குக் கைகாட்டிப் புன்னகைத்தார் கருணாநிதி செம ஸ்டைலாக!.