Published:Updated:

தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதர்களாக சாய்னா நேவால், மேரிகோம்!

Vikatan Correspondent
தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதர்களாக சாய்னா நேவால், மேரிகோம்!
தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதர்களாக சாய்னா நேவால், மேரிகோம்!
தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதர்களாக சாய்னா நேவால், மேரிகோம்!

சென்னை: நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்து விளையாட்டு வீரர்களில் விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிப்பவர் சாய்னா நேவால்.

கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு சாய்னாவை நோக்கி விளம்பரதாரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாய்னாவுடன் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மேரி கோமும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உறுதிபடுத்தியுள்ளார்.

##~~##

'தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் பேசி வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையின் அவசியம் குறித்து இவர்கள் விவரிக்கும் விளம்பர படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது''  என்றார் அவர்.