Published:Updated:

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல்

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல்
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல்
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல்

ஹைதராபாத்: வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்று  பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று ஹைதரபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
 

##~~##
மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது குறித்து முடிவு செய்யலாம். முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதால் மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்.சில மசோதாக்களை நிறைவேற்றலாம்.ஆனால் மக்களுக்கான சலுகைகளை வழங்க மத்திய அரசிடம் நிதி இல்லை.
 
எப்போது தேர்தல் நடந்தாலும் பா.ஜனதாவுக்கு கவலை இல்லை.ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியைதான் தழுவும்.விவசாயிகள்,சிறு வணிகர்கள்,வேலையில்லாத இளைஞர்கள்,விவசாய தொழிலாளர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோபத்தில் உள்ளனர்.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசுகிறது.மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் எதிர்ப்பு அலை வீசுகிறது" என்றார்.

காங்கிரஸ் மறுப்பு

இதனிடையே ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தன்னுடைய முழு ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.