Published:Updated:

மேகாலயா,நாகாலாந்து சட்டசபை தேர்தல்: வாக்குப் பதிவு முடிந்தது

மேகாலயா,நாகாலாந்து  சட்டசபை தேர்தல்: வாக்குப் பதிவு முடிந்தது
மேகாலயா,நாகாலாந்து சட்டசபை தேர்தல்: வாக்குப் பதிவு முடிந்தது
மேகாலயா,நாகாலாந்து  சட்டசபை தேர்தல்: வாக்குப் பதிவு முடிந்தது

கோகிமா: மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.


மேகாலயா

மேகாலயா மாநில சட்டசபைக்கு 60 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்  நடைபெறுகிறது.இதில் முதல்வர்  முகுல்சங்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் லபாங் உள்பட மொத்தம் 345 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி இந்த தேர்தலில் 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா உள்பட மொத்தம் 15 கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கி முதல் 5 மணி நேரத்தில் 51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாகாலாந்து

##~~##
நாகாலாந்து சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 60 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் களத்தில் 37 சுயேச்சைகள் உள்பட 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் கட்சியான நாகா மக்கள் முன்னணியின் முதல்வர் நெய்பிகு ரியோ வடக்கு அங்கமணி 2 தொகுதியிலும், சபாநாயகர் கியானிலலி பெசெயி மேற்கு அங்கமணி 2 தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ஜமீர் மிபூர் 2 தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் துன்சங் சடார் 1 தொகுதியில் காங்கிரஸ்  போட்டியிட்ட பி.சுபாசாங், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை திடீரென மரணம் அடைந்தார்.இதனால் அத்தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
நாகலாந்து மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் பல்வேறு இடங்களில் இருகட்சிகள் சார்பில் மோதல் வெடித்தது. இதனால் தேர்தல் மோதல் ஏற்பட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மதியம் 2 மணி வரை 67.29 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், பெரிய் அசம்பாவித சம்பவங்கள்  ஏதும் இன்றி வாக்குப்பதிவு  அமைதியாக நடைபெற்று முடிவடைந்ததாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்,