அலசல்
Published:Updated:

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இல்லாமல் பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் ஒருவர் இடைத்தேர்தல்களில் களமிறங்கினால், ஒட்டுமொத்தப் பார்வையும் அந்தத் தொகுதியின் மீது குவியும். அப்படியான இடைத்தேர்தல் இல்லை ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது. ஆனாலும் இது, பல மடங்கு கவனத்தை இந்தியா முழுமைக்கும் ஈர்த்திருக்கிறது. தெருக்கள் எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள், அரசு வாகனங்கள் நுழையத் தடை, கூடுதல் பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி முதல், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வரையில் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், சிறப்புத் தேர்தல் அதிகாரி எனத் தேர்தல் கமிஷன் காட்டும் அதிரடிகள் இதுவரை நடக்காதவை. ஒரு சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலுக்கு ஆறு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதும் இதுதான் முதல்முறை.

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

ஜெயலலிதாவின் மர்ம மரணம், அவரது உடலைச் சுற்றி சசிகலா குடும்பத்தினர் அமைத்த அரண், ஜெயலலிதாவைப் போலவே மாறிய சசிகலா, முதல்வர் மணிமுடி தரிக்க சசிகலா நடத்திய மூவ், பன்னீர் எழுச்சி, கூவாத்தூர் கூத்து, சசிகலா சிறையில் அடைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்புக் களேபரம், தினகரனின் திடீர் அவதாரம் எனக் கடந்த நான்கு மாதங்களில் நிறைய அரசியல் மாற்றங்கள். தினமும் பிரேக்கிங் நியூஸ் என்ற நிலையில்தான் ஆர்.கே. நகர் தேர்தலுக்குத் தேதி குறிக்கப்பட்டது. தினகரன் தரப்பு பணத்தை இறக்கினால், பன்னீர் தரப்போ பிணத்தை இறக்கியிருக்கிறது. தேசியக்கொடி போர்த்திய ஜெயலலிதாவின் உடலைப் போலவே ஒரு பொம்மையைத் தயாரித்து ஓட்டுகளைக் கபளீகரம் செய்ய புறப்பட்டுவிட்டார்கள். ஆர்.கே. நகர் எழுதப்போகும் தீர்ப்பைத் தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும்? ஆர்.கே. நகரின் பல்ஸைப் பிடிக்கக் களமிறங்கியது ஜூ.வி. 30-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் தொகுதியின் ஏழு வட்டங்களிலும் கிட்டத்தட்ட எல்லா ஏரியாக்களிலும் புகுந்து புறப்பட்டனர். 1,751 பெண்கள் உட்பட 3,731 பேரைச் சந்தித்தனர். வேட்பாளர்களின் சின்னங்களைப் போட்டு சர்வே படிவம் தயாரிக்கப்பட்டிருந்தது. சர்வே படிவத்துடன் களமிறங்கிய ஜூ.வி டீம் முன்பு இருந்த பெரிய சவால்... ஒவ்வொரு ஏரியாவிலும் கூடியிருந்த வெளியூர் ஆட்கள்தான். எங்கே திரும்பினாலும் கரை வேட்டிகள். அவர்களைத் தவிர்த்துவிட்டு வீடுகளுக்குள் நுழைந்தால், ‘‘உள்ளே வந்துடுங்க...’’, ‘‘டேய், கதவை மூடு’’ என்கிற வார்த்தைகள் வந்து விழுந்தன. ஓட்டுக்காகப் பணம் கொடுக்க வருகிறவர்களை எதிர்பார்த்துப் பலரும் காத்திருக்கிறார்கள். அப்படி வருகிறவர்களுக்கு ஏக மரியாதை. அவர்கள் யாரும் பறக்கும் படையிடம் சிக்கிவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை, பெரும்பாலான மக்களிடம் தெரிகிறது. தங்களுக்குப் பணம் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவும் ‘கதவை மூடு’ டெக்னிக்கைப் பயன்படுத்தியுள்ளனர். அதுதான் நம் டீமுக்கும் சில இடங்களில் நேர்ந்தது. எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் நாடித்துடிப்பை அறிந்த சர்வேயின் ஹைலைட்ஸ் இங்கே!

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

* திரும்பிய பக்கம் எல்லாம் தொப்பிச் சின்னம்தான் தெரிகிறது. அதைத் தாண்டி இரட்டை மின்கம்பத்துக்கு அதிக ஆதரவு இருப்பது சர்வே முடிவில் தெரிந்தது.

* மதுசூதனனும் மருது கணேஷும் மண்ணின் மைந்தர்கள் என்ற போதும் மதுசூதனனுக்குதான் வாய்ஸ் அதிகம். சசிகலா எதிர்ப்பு வாக்குகள் மதுசூதனனுக்குக் கூடுதலாகக் கிடைக்கின்றன.

* கரன்ஸிகள் கரை புரளுவதால் ₹K நகராகிவிட்டது ராதாகிருஷ்ணன் நகர். ஏப்ரல் 1 முதல் 5-ம் தேதி வரை சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. சர்வே பணியை முடிக்கும் இறுதிக்கட்டத்தில்தான் பணம் விநியோகம் முழு வீச்சில் தொடங்கியிருந்தது. சர்வேயின் ஆரம்பத்தில் பல இடங்களில் மதுசூதனுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால், பண விநியோகம் தொடங்்கிய பிறகு தினகரனுக்கு ‘டிக்’ அதிகமானது. இதை வைத்துப் பார்க்கும்போது, பண விநியோகம் படுவேகத்தில் நடந்தால், தினகரனின் வெற்றி எளிதாகலாம். 

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

* ‘‘நேத்துதான் யாரோ சர்வே எடுத்துட்டுப் போனாங்க’’ என்கிற குரல்கள் பல இடங்களில் கேட்டன. விசாரித்தால், ஆளும்கட்சியே தனியாக சர்வே நடத்தியிருக்கிறது. அதில், தினகரனுக்கு மூன்றாவது இடமாம். ‘ஜெயிக்க வேண்டும். அல்லது இரண்டாவது இடமாவது கிடைக்க வேண்டும்’ என தினகரன் தரப்பு கட்டளையிட்டிருக்கிறதாம். ‘பன்னீர் அணிக்கு இரண்டாவது இடம் கிடைத்தாலும் அது தங்களுக்குத் தோல்விதான்’ என்ற பயத்தில் இருக்கிறார்கள் சசிகலா அணியினர். அதனால்தான் பணம் பாய்கிறது. 

* 1989-ல் அ.தி.மு.க இரண்டாக உடைந்த நேரத்தில்தான், தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. அதே நிலைதான், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும்.  ஆனால், ‘அ.தி.மு.க மூன்றாக உடைந்து, இரட்டை இலை முடக்கப்பட்டதால் தி.மு.க எளிதில் ஜெயிக்கும்’ என்கிற நிலை இப்போது இல்லை என்பதுதான் அதிர்ச்சி.

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

* “39, 40, 41 ஆகிய மூன்று வட்டங்கள்ல விழும் ஓட்டுகளை வெச்சுத்தான் மதுசூதனனும் மருது கணேஷும் லீடிங் பெறுவார்கள்’’ எனச் சொல்கிறார்கள் தேர்தல் பணியில் இருக்கும் கட்சிக்காரர்கள்.

*  சசிகலாவா... பன்னீரா? எனத் தீர்மானிக்கும் தேர்தலாக மாறிவிட்டதால், மற்ற தேர்தல்களைவிட பணம் அதிகம் பாய்ந்து கொண்டிருக்கிறது. பன்னீர் தரப்பும் பணத்தை இறைக்கிறது. வெற்றியைத் தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கலாம்.

*  தே.மு.தி.க-வுக்குத்தான் கடுமையான சரிவு ஏற்படும் எனத் தெரிகிறது. தீபாவைவிட பி.ஜே.பி அதிக ஓட்டுகளைப் பெறலாம்.

ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே

*  ‘பணப் பட்டுவாடா’ கரைபுரள்வதால் தேர்தல் நடக்குமா என்கிற சந்தேகமும் எழுகிறது. பண விநியோகம் முழுமையாகச் செய்யப்பட்டு, தேர்தல் நடந்தால் சர்வே முடிவுகள் அப்படியே உல்டா ஆகலாம். காசு உள்ளவர்கள் பக்கமே வெற்றி திரும்பலாம்.

* பணம் பாய்ந்தால் தினகரன் வெல்லலாம். தினகரனுக்கும் மதுசூதனனுக்கும் சரிசமமாக அ.தி.மு.க வாக்குகள் பிரிந்தால் தி.மு.க. ஜெயிக்கலாம் என்றும் ஆருடம் சொல்லப்படுகிறது.

- ஜூ.வி. டீம் 

இன்ஃபோகிராஃபிக்ஸ்: ராஜு முருகேசன்