Published:Updated:

தேர்தல் முறைகேடு: புகார் செய்ய டோல் ஃப்ரீ நம்பர்

சென்னை, மார்ச் 03, 2011

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நியாயமான முறையிலும், அமைதியாகவும் தேர்தல்களை நடத்துவதற்காக வருமான வரித்துறையின் விசாரணை இயக்குனரகத்தின் உதவியை இந்திய தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. ##~~##

இதனையட்டி 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொலைபேசி எண்ணை வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கொரியர் சேவை, முக்கிய ஹோட்டல்கள், ஹவாலா முகவர்கள், நிதி தரகர்கள் போன்றோர் வாயிலாக மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றம் நிகழ்ந்தாலோ, வேட்பாளர்கள் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக போலியான விழாக்களை நடத்தினாலோ அதுபற்றிய தகவல்களை பொது மக்கள் இந்த எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.

இலவச தொலைபேசி உதவி எண் : 1800 4256669

தொலைநகல் எண் : 044 - 2824 0064

மின்னஞ்சல் : itcontrolroomchennai@gmail.com

சென்னை வருமான வரித் துறை கூடுதல் இயக்குனர் எஸ். ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு