Published:Updated:

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடியூரப்பா

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடியூரப்பா
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடியூரப்பா
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடக ஜனதா கட்சியின் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 69 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
##~~##
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 69 வேட்பாளர்களின் பட்டியலை கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ளார். 
பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் 150 தொகுதிகளில் தான் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டதாகவும், மக்கள் தங்கள் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.