Published:Updated:

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: கட்சிகளின் வியூகம்!

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: கட்சிகளின் வியூகம்!
நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: கட்சிகளின் வியூகம்!
நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: கட்சிகளின் வியூகம்!

முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து விடுத்துவரும் மிரட்டல் காரணமாக,   மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 540 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 203 தொகுதிகளைக் கைப்பற்றியது.  115 தொகுதிகளில் வெற்றிபெற்ற‌ பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை அடைந்தது. இதையடுத்து, சமாஜ்வாதி (22), திரிணமுல் காங்கிரஸ் (19), தி.மு.க.(18) விடுதலைச் சிறுத்தைகள்(1) உள்ளிட்ட கட்சிகளின் துணையோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமராக மன்மோகன் சிங் பதவி ஏற்றுக்கொண்டார்..

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சில மாதங்களுக்கு முன் வாபஸ் பெற்றுக்கொண்டது. அதேபோல், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தி.மு.க.வும் இப்போது தனது ஆதரவை வாபஸ் பெற்று விட்டது. அதோடு சேர்ந்து, விடுதலைச் சிறுத்தைக் கட்சியும் ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது.

சமாஜ்வாதி கட்சி மட்டுமே இப்போது வரை ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், காங்கிரஸ்

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: கட்சிகளின் வியூகம்!

கட்சியைச் சேர்ந்த பேனி பிரசாத் வர்மா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கெனவே, தீவிரவாதிகளுடன் முலாயம் சிங்குக்கு தொடர்பு இருக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் வர்மா. அந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் நேற்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 40 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று கூறிய மத்திய மந்திரி பேனி பிரசாத் வர்மா, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி 4 இடங்களில்தான் வெற்றி பெறும் என்று கிண்டல் செய்துள்ளார். வர்மாவின் இந்தப் பேச்சு சமாஜ்வாதி கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வர்மாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதால், அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என, சமாஜ்வாதி கட்சி மீது பாய்ந்து இருக்கிறது. ஒரு மத்திய மந்திரிக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்ற அறிக்கை வெளியான பிறகும் கூட, காங்கிரஸ் கட்சித் தலைமையோ, பிரதமரோ இதுவரை பதில் பேசவில்லை.

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: கட்சிகளின் வியூகம்!

மேலும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவியான மம்தா பானர்ஜி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்ட காங்கிரஸ், சிறிய கட்சிகளின் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு எண்ணிக்கை விளையாட்டு நடத்தி ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று, காரசாரமான அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். மைனாரிட்டி ஆகி விட்ட பிறகு, தேர்தலைச் சந்திப்பதுதான் முறை என்றும் மம்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதேநேரத்தில், சமாஜ்வாதி, திரிணமுல், அ.தி.மு.க. பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கலாம் என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 80 தொகுதிகளை உடைய உத்தரப்பிரதேசத்தில் இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதி, 39 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. 21 தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் முதல்வர் பதவி வகிக்கும் நவீன் பட் நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மற்றும் 42 தொகுதிகளை உடைய மேற்கு வங்காளத்தில் ஆட்சி நடத்தும் மம்தவின் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து ஓர் புதிய அணியை உருவாக்கினால்,  வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கட்சியிலும் ஆட்சியிலும் தினமும் ஓர் பிரச்னையை காங்கிரஸ் கட்சி சந்தித்து வருவதால், அடுத்த் ஆண்டு நடத்தப்பட வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல், இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படலாம் என்றும் அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.