Published:Updated:

கர்நாடகா தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடகா தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடகா தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடகா தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 5ஆம் தேதி மொத்தம் 224 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வும் குதித்து 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 

##~~##
இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்திருக்கிறார்.
அதில் ராஜாஜி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அவைத் தலைவர் கே.முனுசாமியும், காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநில செயலாளர் வா.புகழேந்தியும், கோலார் தங்கவயல் (தனி) தொகுதியில் எம்.அன்பு, மைசூர் நரசிம்மராஜா தொகுதியில் ஆர்.ரவீந்திர குமார் மற்றும் சாம்ராஜ் நகர் அனூர் தொகுதியில் எம்.ரவி ஆகிய 5 பேரும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்திருக்கிறார்.
இரா.வினோத்