Published:Updated:

கர்நாடகாவில் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரசாரம்!

கர்நாடகாவில் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரசாரம்!
கர்நாடகாவில் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரசாரம்!
கர்நாடகாவில் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரசாரம்!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலி்ல் போட்டியிடுவதற்காக முக்கியத் தலைவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட 266 பேர் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

ஷிகாரிபூர் தொகுதியில் எடியூரப்பாவும், ராம் நகர் தொகுதியில் குமாரசாமியும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

##~~##
கோரடகரே தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வரனும், வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் தேர்தலில் தாம் முக்கிய நபராக உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் 1022 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  வாக்குப் பதிவு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.