Published:Updated:

பெண் தலைமை தேர்தல் ஆணையர் ரமாதேவி காலமானார்

பெண் தலைமை தேர்தல் ஆணையர் ரமாதேவி  காலமானார்
பெண் தலைமை தேர்தல் ஆணையர் ரமாதேவி காலமானார்
##~~##

இந்திய தேர்தல் ஆணையத்தின் பெண் தலைமை தேர்தல் ஆணையர் என்ற பெருமை பெற்ற விஎஸ் ரமாதேவி காலமானார். அவருக்கு வயது 79.

1934 ஆம் ஆண்டு பிறந்த ரமாதேவி, 1990 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தார்.

ஒரே மாதம் மட்டுமே பதவியில் இருந்தார் ரமாதேவி. இவரைத் தொடர்ந்து டி.என்.சேஷன் தலைமைத்தேர்தல் ஆணையராக இருந்தார்.

1997 ஆம் ஆண்டு தொடங்கி 2 ஆண்டுகள் இமாச்சலப் பிரதேச ஆளுநராகவும், 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2002 வரை கர்நாடக ஆளுநராகவும் ரமாதேவி பதவி வகித்தார்.