Published:Updated:

பிரதமர் வேட்பாளர் யார்? அத்வானி விளக்கம்

பிரதமர் வேட்பாளர் யார்? அத்வானி விளக்கம்
பிரதமர் வேட்பாளர் யார்? அத்வானி விளக்கம்
பிரதமர் வேட்பாளர் யார்? அத்வானி விளக்கம்

பெங்களூர்: பிரதமர் வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அத்வானி நேற்று ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

##~~##
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை, கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசித்த பின்னரே தேர்வு செய்வோம் என்றார்.
இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அத்வானி, இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றார்.