Published:Updated:

வாக்காளர்களுக்கு பணம்: கர்நாடக அ.தி.மு.க வேட்பாளர் கைது

வாக்காளர்களுக்கு பணம்: கர்நாடக அ.தி.மு.க வேட்பாளர் கைது
வாக்காளர்களுக்கு பணம்: கர்நாடக அ.தி.மு.க வேட்பாளர் கைது
வாக்காளர்களுக்கு பணம்: கர்நாடக அ.தி.மு.க வேட்பாளர் கைது

பெங்களூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 5ஆம் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தின் போது கட்சி பிரமுகர்களும், வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து, அதிரடி நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியது. பணம் வாங்கும்,  கொடுப்பவர்களை கைது செய்ய காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து பணம் வாங்கிய வாக்காளர்களை  போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  நாட்டிலேயே முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெங்களூர் ராஜாஜி நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில்  போட்டியிடும் வேட்பாளளர் முனிசாமியும், அ.தி.மு.க  பிரமுகர்களும் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

##~~##
அப்போது, ராஜாஜி நகர் 5வது கிராசில் அவர்கள் பிரசாரம் செய்தபோது பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கினர். இது பற்றி மாகடிரோடு போலீசுக்கு வந்த ரகசிய  தகவலையடுத்து விரைந்து வந்த அவர்கள், அ.தி.மு.க வேட்பாளர் முனிசாமியையும், அவருடைய மகன் தாமோதரன், கட்சி உறுப்பினர் பாபு ஆகியோரையும் கைது செய்தனர்.
வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.11,800 ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்.