Published:Updated:

தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்

தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்
தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்
தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்

சென்னை: தேர்தல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அழகிரி. ஆனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த  பி.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில்,வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அழகிரி தேர்தலில் வெற்றி பெற்றார் என்றும், எனவே அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

##~~##
இதற்கிடையே உடல் நிலை பாதிக்கபட்ட மோகன் மரணமடைந்துவிட்டதால், அவருக்கு தேர்தல் முகவராக செயல்பட்டவரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான லாசர் வழக்கை தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .அப்போது மு.க. அழகிரி ஆஜராகி தன் மீது சுமத்தபட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தார்.