Published:Updated:

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்தது: சோனியா நாளை வருகை!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்தது: சோனியா நாளை வருகை!
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்தது: சோனியா நாளை வருகை!
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்தது: சோனியா நாளை வருகை!

பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை மங்களூர் வருகிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.  3 ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக ஜனதா கட்சி, பி.எஸ்.ஆர். காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஹவேரி அருகே நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் ஆவேரி, தும்கூர் மற்றும் மைசூர் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

சோனியா வருகை

ராகுலைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை சிக்மகளூர், மங்களூர் ஆகிய இடங்களில்

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்தது: சோனியா நாளை வருகை!

நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதால் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் தருவதை தடுக்கும் பணியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.