Published:Updated:

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்:

மத்தியப்பிரதேசம்:
மொத்த இடங்கள்: 230
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 116

காங்கிரஸ் : 113
பா.ஜ.க : 109

பி.எஸ்.பி : 02
மற்றவை: 06

ராஜஸ்தான்: 
மொத்த இடங்கள்: 199
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 100

காங்கிரஸ் கூட்டணி: 101
பா.ஜ.க : 73

பி.எஸ்.பி : 06
மற்றவை: 19

சத்தீஸ்கர்:
மொத்த இடங்கள்: 90
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 46

காங்கிரஸ்: 67
பா.ஜ.க : 15

பி.எஸ்.பி: 07
மற்றவை: 01

தெலங்கானா:
மொத்த இடங்கள்:  119
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 60

டி.ஆர்.எஸ் : 87
காங்கிரஸ் கூட்டணி: 21

பா.ஜக: 01
மற்றவை: 10

மிசோரம்:
மொத்த இடங்கள்:  40
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 21

எம்.என்.எஃப்: 26
என்.பி.பி: 00
காங்கிரஸ்: 05
பா.ஜ.க: 01
மற்றவை:  08

"நாட்டு மக்களின் இதயத் துடிப்பைக் கேட்க மோடி தவறிவிட்டார்"-ராகுல் காந்தி பேட்டி

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது " இந்த வெற்றியை விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். இன்றைக்குப் பா.ஜ.க வை தோற்கடித்துள்ளோம், அதே போல 2019-ம் ஆண்டும் அவர்களைத் தோற்கடிப்போம். நாட்டு மக்களின் இதயத் துடிப்பை கேட்க மோடி தவறி விட்டார். பண மதிப்பிழப்பு மற்றும் வேலையின்மையின் போன்றவற்றால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. இது மாற்றத்திற்கான நேரம், அதை முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்தார்.

ராகுல் சோனியா தீவிர ஆலோசனை!

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ராஜஸ்தானில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. எனினும் முன்னணி நிலைவரம் மாறி மாறி வருவதால், காங்கிரஸின் சச்சின் பைலட், அம்மாநிலத்தில் வெற்றிபெறும் நிலையில் உள்ள சுயேட்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாயவதி தீவிர ஆலோசனை

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜக வுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயவாதி, தனது எம்.எல்.ஏ -க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில்   பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், ராஜஸ்தானில் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

ராஜஸ்தானிலும் இழுபறி நிலை!

ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான 100 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது சிறு பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் தற்போது 91 இடங்களிலும் பாஜக 86 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதனால், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் இழுபறி நிலை நீடிக்கிறது. 

மத்தியப் பிரதேசத்தில் முன்னணி நிலவரம் மாறிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால், ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதில் தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது. தற்போது காங்கிரஸ் 114 இடங்களிலும் பா.ஜ.க 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பா.ஜ.க அங்கு முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க 116 இடங்களிலும் காங்கிரஸ் 107 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை!

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. 5 மாநிலங்களிலும் பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சியைத் தக்க வைக்கிறது. மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.   

5 மாநில தேர்தல் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் கடும் போட்டி!

மத்தியப்பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதலில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்த  வந்த நிலையில், தற்போது பா.ஜ.க கடும் போட்டி அளிக்கிறது. பா.ஜ.க 102 இடங்களிலும், காங்கிரஸ் 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை.

காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்!

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கரின் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். 

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

தெலங்கானாவில் மீண்டும் டி.ஆர்.எஸ்!

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி 80 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் பா.ஜ.க 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 60 இடங்களுக்கு மேல் டி.ஆர்.எஸ் முன்னிலையில் உள்ளதால், தெலங்கானாவில் ஆட்சியை தக்க வைக்கும் எனக் கூறப்படுகிறது. 

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் முதலில் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி தொடர்கிறது. 

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக முன்னிலையில் உள்ளது. 

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும்

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆளும் பா.ஜ.க வை விட காங்கிரஸ் அதிக இடங்கள் முன்னிலையில் உள்ளது. தபால் ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. 

தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 

இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால் நாடு முடிவதும் இந்தத் தேர்தல் முடிவுகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.  

" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018

678 தொகுதிகள்.... 8,500 வேட்பாளர்கள்.... 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் அண்மையில் பல்வேறுகட்டங்களாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான தேர்தலை கட்சிகள் சந்திக்கவுள்ள நிலையில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள், அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.