Published:Updated:

திருவாரூர் இடைத்தேர்தல் - தி.மு.க-வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

திருவாரூர் இடைத்தேர்தல்  - தி.மு.க-வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!
திருவாரூர் இடைத்தேர்தல் - தி.மு.க-வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி தொகுதியான திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலானது வருகிற ஜனவரி 28-ம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி திருவாரூர் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பரப்புரை செய்து அவர் மகத்தான வெற்றியைப் பெற உழைப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் சாசனச் சட்டம், மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவற்றை கேலிக்கூத்தாக்கும் மத்திய பா.ஜ.கவையும், அதற்குக் கைப்பாவை அரசாகச் செயல்பட்டு மாநில உரிமைகளையும், தமிழக மக்கள் நலன்களையும் மத்திய அரசிடம் அடகு வைத்துள்ள அ.தி.மு.க ஆட்சியையும் அகற்ற இத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்பதை உணர்ந்து திருவாரூர் வாக்காளர்கள் அனைவரும் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பானை வரும் 3-ம் தேதி வெளியிடப்படும் எனவும், அதேபோல், வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 3-ம் தேதி அன்றே தொடங்கவுள்ளது குறிபிடத்தக்கது.