Published:Updated:

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவு உடனுக்குடன்...

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவு உடனுக்குடன்...
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவு உடனுக்குடன்...

பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கர்நாடகத்தில் 223 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

36 மையங்களில் எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

##~~##
முதலில் எம்எல்ஏக்களை தேர்ந்தெடுப்பதற்கான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
முன்னணி நிலவரம்
காங்கிரஸ் - 112
பா.ஜ.க. - 37
மதசார்பற்ற ஜனதா தளம்  - 44
எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி - 14
மற்றவை - 8
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.