Published:Updated:

கர்நாடகாவில் 7 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் : பா.ஜ.க.வுக்கு தோல்வி

கர்நாடகாவில் 7 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் : பா.ஜ.க.வுக்கு தோல்வி
கர்நாடகாவில் 7 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் : பா.ஜ.க.வுக்கு தோல்வி
கர்நாடகாவில் 7 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் : பா.ஜ.க.வுக்கு தோல்வி

பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க. தோல்வியை சந்தித்துள்ளது.

223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வந்தது.

இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், 121 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தின்போது இரண்டாம் இடத்தை கூட பா.ஜனதா கைப்பற்றாததால், எதிர்கட்சி வாய்ப்பை கூட பா.ஜனதா இழந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் 40 இடங்களை கைப்பற்றியது.

ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பா.ஜனதாவுக்கு சமமாக 40 இடங்களை கைப்பற்றி 2 ம் இடத்திற்கு போட்டியில் உள்ளது

எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சைகள் உள்ளிட்ட இதரகட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்பரீஷ், வருணா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா, ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள்

                                                 மொத்த தொகுதிகள் 233

##~~##
                                                        
காங்கிரஸ் - 121

                                                             பா.ஜனதா - 40

                                                  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி  - 4

                                               எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி - 6

                                                  சுயேட்சைகள் & இதரகட்சிகள் - 16