Published:Updated:

கர்நாடகா: அடுத்த முதலமைச்சர் யார்?: கடும் போட்டி!

கர்நாடகா: அடுத்த முதலமைச்சர் யார்?: கடும் போட்டி!
கர்நாடகா: அடுத்த முதலமைச்சர் யார்?: கடும் போட்டி!
கர்நாடகா: அடுத்த முதலமைச்சர் யார்?: கடும் போட்டி!

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில், முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து அக்கட்சியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வரா, மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

##~~##
இது தொடர்பாக சித்தாராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஜனநாயகத்தில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.எனவே முதலமைச்சரை தேர்வு செய்யும் விஷயத்தில் நாங்கள் ஜனநாயக பாதையை பின்பற்றுவோம்" என்றார்.

சீதாராமையாவுக்கு அதிக வாய்ப்பு

இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா கர்நாடக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.