Published:Updated:

எதிர்கட்சி வரிசையில் அமருவோம்: குமாரசாமி

எதிர்கட்சி வரிசையில் அமருவோம்: குமாரசாமி
எதிர்கட்சி வரிசையில் அமருவோம்: குமாரசாமி
எதிர்கட்சி வரிசையில் அமருவோம்: குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை கைப்பற்றி உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எதிர்கட்சி வரிசையில் அமரும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், ஒருவேளை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்றார்.

##~~##
"பா.ஜனதாவுக்கு எதிராக எப்படி நாங்கள் போராடினோமோ அப்படித்தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் போராடினோம்.எனவே நாங்கள் எதிர்கட்சி வரிசையில்தான் அமருவோம்; காங்கிரஸ் கட்சியும் எங்கள் ஆதரவை கோராது. அவர்களுக்கு ஆதரவளிக்க சிறிய கட்சிகள் உள்ளன" என்று குமாரசாமி மேலும் கூறினார்.