Published:Updated:

கர்நாடகாவில் மோடி மந்திரம் எடுபடவில்லை: காங்கிரஸ்

கர்நாடகாவில் மோடி மந்திரம் எடுபடவில்லை: காங்கிரஸ்
கர்நாடகாவில் மோடி மந்திரம் எடுபடவில்லை: காங்கிரஸ்
கர்நாடகாவில் மோடி மந்திரம் எடுபடவில்லை: காங்கிரஸ்

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மந்திரம் எடுபடவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதால், கர்நாடகாவில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பை தேடித்தரலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவியது.

ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது.

##~~##
இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தாராமையா, தேர்தல் முடிவு குறித்த முன்னணி நிலவரங்களை பார்க்கும்போது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படும் என்பது தெரிகிறது. அவரிடம் ( மோடி ) என்ன மந்திரம் உள்ளது? ஒன்றுமில்லை" என்றார்.