Published:Updated:

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா!

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா!
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா!
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 22வது முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இன்று பதவியேற்றார்.

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

##~~##
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் 22வது முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இன்று பதவியேற்றார்.

ஸ்ரீ கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அந்த மாநில ஆளுநர் பரத்வாஜ், சித்தராமையவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மற்ற அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவியேற்க உள்ளனர்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.