Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

கூட்டணிகள் முடிவாகிவிட்டன. யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பதும் முடிவாகிவிட்டது. வேட்பாளர் பட்டியல்கூட ரெடி. மிச்சமிருப்பது என்ன? தேர்தல் வாக்குறுதிகள்தானே! இந்தத் தேர்தலில் பிரதானக் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகள் என்னவாக இருக்கும் எனத் திட்டம் தீட்டி உளவறிந்ததில் தெரியவந்த லிஸ்ட் இது.

ஐடியா அய்யனாரு!

தி.மு.க
ரும் தேர்தலில் வெற்றிபெற்றால் கட்சி சார்பில் ஆயிரமாவது முறையாக ‘அ.தி.மு.க ஆட்சி கவிழும்’ பேட்டி கொடுக்கப்படும். மேலும், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் போதிய அனுபவமின்றி தடுமாறும் கொடுமை யைக் கட்சியால் சகிக்கமுடியவில்லை. இத்துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஏற்கெனவே அரசியலில் இருக்கும் தலைவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே மேன்மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வார்த்தெடுக்கப்படும்.

அ.தி.மு.க
ந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்தத் தேர்தல்வரை எத்தனை ரெய்டுகள் வந்தாலும் கட்டுக்குலையாமல் கட்சி காப்பாற்றப்படும். மேலும், எதிர்கால விபரீத விளைவுகளை யோசித்து, அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்வேளையில் மொத்தமாகக் கட்சியை பி.ஜே.பி-யிடம் ஒப்படைப்பது குறித்தான சாதக பாதகங்கள் பற்றி அறிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும்.

ரஜினி
வ்வொரு தேர்தலுக்கும் ஒருபடி முன்னேறுவது கட்சியின் நோக்கம். எனவே, அடுத்தத் தேர்தலுக்குள் கண்டிப்பாக கட்சியின் முதல் பாதி பெயர் மட்டுமாவது அறிவிக்கப்படும். போக, அரசியல் சைடு பிசினஸ்தான் என்பதால், மெயின் பிசினஸான சினிமாவில் ஆண்டுக்கு ஒரு படம் நிச்சயம் தலைவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும்.

காங்கிரஸ்
ண்டாண்டுகாலமாக தமிழக மக்களுக்கு ‘கலக்கப்போவது யாரு’ டைப் காமெடிகளை வழங்குவது கட்சியின் கோஷ்டிகள்தான். அதை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு, கோஷ்டித் தலைவர்களுக்கு மியூசிக்கல் சேர் போட்டி நடத்தப்பட்டு, தலைவர் பதவி வழங்கப்படும். மேலும், தி.மு.க-வே துரத்தினாலும் தி.மு.க-வுடன் மட்டுமே கூட்டணி என்பதில் கட்சி உறுதியாக இருக்கும்.

பா.ம.க
டுத்தத் தேர்தலுக்கு கண்டிப்பாக வேறு கூட்டணிக்கு மாறி, பரம்பரைப் பரம்பரையாகத் தொட்டுத் தொடரும் பா.ம.க-வின் பாரம்பர்யம் காப்பாற்றப்படும். மேலும், ஏற்கெனவே விலகியவர்கள் போக மீதியிருப்பவர்களையும் ஓரங்கட்டிவிட்டுக் குடும்ப உறுப்பினர்களை எல்லாப் பொறுப்புகளிலும் உட்காரவைக்கப் போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism