Published:Updated:

என் கையில் பணமே இல்லை: வேட்பு மனுவில் மன்மோகன் தகவல்

என் கையில் பணமே இல்லை: வேட்பு மனுவில் மன்மோகன் தகவல்
என் கையில் பணமே இல்லை: வேட்பு மனுவில் மன்மோகன் தகவல்
என் கையில் பணமே இல்லை: வேட்பு மனுவில் மன்மோகன் தகவல்
அசாம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார் மட்டுமே மன்மோகனிடம் உள்ளதாம். ராஜ்சபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இந்த இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அதில், அளிக்கப்பட்ட உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணம் ஏதும் இல்லை எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் தனது வேட்புமனுவில், தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 பிக்சட் டெபாசிட் மற்றும் 3 சேமிப்பு கணக்குகளுடன் சேர்த்து தனக்கு இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3,87,63,188 என குறிப்பிட்டுள்ளார்.

சண்டிகரில் இருக்கும் வீடு மற்றும் டெல்லியில் உள்ள அபார்ட்மெண்ட் ஆகிய அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.7,52,50,000 எனவும், ரூ.21,033 மதிப்புள்ள 1996 ம் ஆண்டு மாடல் மாருதி கார் தனக்கு சொந்தமாக இருப்பதாக கூறிய உள்ளார்.

##~~##
பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுரிடம் ரூ.20,000 பணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் ரூ.3,45,332 மதிப்புள்ள 150.8 கிராம் தங்கமும், வங்கி சேமிப்பு தொகையாக ரூ.16,62,570 ம் உள்ளதாக மன்மோகன் சிங்கின் சொத்து விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வேட்புமனுவில் பிரதமரின் முகவரியும் கவுகாத்தியின் சாருமோட்டோரியா பகுதியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடு, 1991ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் மன்மோகன் சிங் அசாம் மாநிலம் சார்பில் போட்டியிடுவதற்காக அசாம் முன்னாள் முதல்வர் ஹிடிஸ்வர் சாய்கியாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டதாக மன்மோகன் சிங் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.