அரசியல்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐ.பி.எல் போட்டிகளும் லோக்சபா தேர்தலும் ஒரேநேரத்தில் நடைபெறுகின்றன. தேர்தல் அளவுக்கு வருடாவருடம் நடக்கும் திருவிழா ஐ.பி.எல்-தான். எனவே தமிழகக் கட்சிகள் ஐ.பி.எல் வீரர்களைத் தங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக தத்தெடுத்துக் கொண்டால் கவனம் ஈர்த்த மாதிரியும் இருக்கும், ஓட்டு சேர்த்தமாதிரியும் இருக்கும். யாருக்கு, யார் பிராண்ட் அம்பாசிடர் ஆகலாம்?

ஐடியா அய்யனாரு!

அ.தி.மு.க
சாருதின், ஸ்ரீசாந்த் குரோன்சே இவர்களைப் பரிசீலிக்கலாம். மூவருமே ‘பேரங்களில்’ சிக்கியவர்கள். அ.தி.மு.க-வுக்காக இவர்கள் களமிறங்க இந்த ஒரு ஒற்றுமை போதாதா?!

பா.ம.க
போ
ராட்டம், கலவரம், மாதிரி பட்ஜெட் என எல்லா ஏரியாக்களிலும் ரவுண்டு வருவது பா.ம.க ஸ்டைல். அப்படியான ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மட்டுமே. அதைவிட முக்கியமான ஒற்றுமை ஐ.பி.எல்-லில் அதிக டீம்களில் ஆடிய முக்கிய வீரர்களுள் யுவராஜ் சிங்கும் ஒருவர். தமிழகத்தில் பல கூட்டணிகளில் இடம்பெற்ற ஒரே கட்சியும் பா.ம.க-தான். எனவே இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி செமையாக ஒர்க் அவுட் ஆகும்!

மக்கள் நீதி மய்யம்
சி
னிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜா கமல்தான். கோலிவுட்டை பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றவர். ஆனால் அரசியலில் அவரைக் கண்டுகொள்ள ஆளே இல்லை. இதேமாதிரி விதி இன்னொருவர் வாழ்க்கையிலும் விளையாடியிருக்கிறது. உலகக் கோப்பை ஃபைனல்வரை இந்தியாவை அழைத்துச் சென்ற சூப்பர் கேப்டன் கங்குலி, ஐ.பி.எல்-க்கு வந்தபோது ஆளாளுக்கு பந்தாடினார்கள். வெறுத்துப்போய் மனிதர் விலகியதுதான் மிச்சம். கங்குலிக்குக் கண்டிப்பாக கமலின் ஃபீலிங்குகள் புரியும்.

தி.மு.க
லைஞர், ஸ்டாலின், இப்போது உதயநிதி என மூன்று தலைமுறைகள் அரசியலுக்கு வந்தாகிவிட்டது. போக, கூட்டணி பேசுவதே கார்ப்பரேட் ஸ்டைலில் இருப்பதாகவும் புகார்கள் கிளம்பின. ஐ.பி.எல் போட்டிகளை கார்ப்பரேட் ஸ்டைலில் டீம் நடத்தும் ஒரே ஆள் மும்பை இந்தியன் ஓனரான ஆகாஷ் அம்பானிதான். அம்பானி, முகேஷ் அம்பானி, ஆகாஷ்  அம்பானி என அவர்களும் மூன்று தலைமுறைகள். எனவே பிளேயர்கள்தாண்டி டீம் மேனேஜ்மென்ட் தி.மு.க-வுக்காகக் களமிறங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.

தே.மு.தி.க
தே
.மு.தி.க-வுக்கு பொருத்தமான பிராண்ட் அம்பாசிடர் விராட் கோலிதான். இரண்டு பேருமே கேப்டன்கள். இரண்டு பேருமே கோபக்காரர்கள் என ஒற்றுமைகள் எக்கச்சக்கம். முக்கியமான ஒற்றுமை பல ஆண்டுகளாக ஆடினாலும், இன்னமும் ஐ.பி.எல்-லில் கோலி ஜெயித்தது இல்லை. இத்தனைத் தேர்தல்களில் போட்டியிட்ட பின்னரும் தே.மு.தி.க சொல்லிக்கொள்ளும்படி சாதித்ததே இல்லை. எனவே, கேப்டன் டூ கேப்டன் ஹெல்ப் செய்தால் பொருத்தமாக இருக்கும்!