Published:Updated:

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

Published:Updated:
போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?
போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியான உடனேயே காங்கிரஸ் கட்சியில் தொடங்கிவிட்டது போட்டா போட்டி! தலைவர்களும் வாரிசுகளும் டெல்லியுடன் மல்லுக்கட்டத் தொடங்கினார்கள். ஒருவழியாக வெளியாகியிருக்கிறது வேட்பாளர் பட்டியல். சரி, எப்படி வாங்கினார்கள் சீட்?

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவள்ளூர் (தனி): திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி(தனி)யில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான செல்வப்பெருந்தகைக்குத்தான் சீட் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர்களில் ஒருவரான கே.ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 15 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் பதவியில் இருந்தார். அந்தச் சமயத்திலிருந்தே ராகுல்காந்தியிடம் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் ஜெயக்குமாருக்கு ஓ.கே சொல்லிவிட்டதால், எளிதாக சீட் கிடைத்துவிட்டது.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

ஆரணி: மாநிலச் செயல்தலைவராக இருக்கும் விஷ்ணு பிரசாத்துக்கு வாய்ப்பு இத்தொகுதியில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில், ஆரணி சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்தவர் இவர். கடந்த 2014-ம் ஆண்டு, ஆரணி நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூடப் பெறவில்லை. ஆனாலும், இவருக்கே இம்முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணம், சாதிதான் என்கிறார்கள். இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகம். விஷ்ணுபிரசாத்தும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால்தான், காங்கிரஸ் மேலிடம் மீண்டும் விஷ்ணுபிரசாத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

தேனி: தேனி தொகுதியில், முன்னாள் எம்.பி. ஜே.எம் ஆரூண்தான் வேட்பாளர் என்ற பேச்சு நிலவி வந்தது. ஆனால், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, ‘தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என ஆரூண் கூறி விட்டார். குஷ்பூ, இத்தொகுதியைக் கேட்டு வந்தார். ஆனால், அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், அ.ம.மு.க. சார்பில், தங்கத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவதால்... இவர்கள் இருவருக்கும் ‘டஃப்’ கொடுக்கக்கூடிய ஒரு வேட்பாளரைத்தான் களத்தில் இறக்க வேண்டும் என முடிவு செய்த காங்கிரஸ் மேலிடம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

கன்னியாகுமரி: இத்தொகுதியில், ‘சி.எஸ்.ஐ கிறிஸ்துவர்கள்தான் அதிகம். அதனால் எங்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும்’ என முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ராபர்ட் புரூஸ், அசோகன் சாலமன் மற்றும் தம்பி விஜயகுமார் ஆகியோர் மேலிடத்தை அணுகியிருக்கிறார்கள். அதேபோல ஆர்.சி கிறிஸ்துவர்கள்தான் அதிகம் என்று காரணம் சொல்லி பொன்.ஜெஸ்லி கல்வி நிறுவனத்தலைவர் பொன்.ராபர்ட் சிங், விஜிலியாஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் ஆகியோரும் மேலிடத்தை அணுகியிருக்கிறார்கள். சி.எஸ்.ஐ மற்றும் ஆர்.சி பிரிவினருக்குள் மோதல் ஏற்பட்டு ஓட்டுக் கிடைப்பதில் பிரச்னை வந்து விடக் கூடாது என்று மேலிடம் எண்ணியதால், இந்து மதத்தைச் சேர்ந்த வசந்தகுமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, பி.ஜே.பி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இணையாகச் செலவு செய்ய வசந்தகுமார்தான் சரியான நபர் என்பதுவும், வசந்தகுமாருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

திருச்சி: கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ், திருச்சியைக் குறி வைத்து ப.சிதம்பரம் மூலமாகக் காய் நகர்த்தி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே, ‘நான் திருச்சி அல்லது ராமநாதபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்’ என்று வெளிப்படையாகவே சொல்லி வந்தார், திருநாவுக்கரசர். அதற்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள், காங்கிரஸ்காரர்கள். இவரிடம் இருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டு சிதம்பரத்தின் ஆதரவாளரான அழகிரிக்கு வழங்கப்பட்ட சமயத்தில், ‘நீங்கள் விரும்பும் தொகுதியில் எம்.பி சீட் தருகிறேன்’ என அரசருக்கு ராகுல் உறுதி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, திருச்சி தொகுதி திருநாவுக்கரசருக்குக்  கிடைத்துவிட்டது.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

விருதுநகர்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஈரோடு தொகுதியை எதிர்பார்த்து இருந்த வேளையில், அத்தொகுதி, ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அதனால், விருதுநகர் அல்லது திருச்சியைக் குறிவைத்து மேலிடத்தில் பேசி வந்தார் இளங்கோவன். அதேநேரத்தில், ‘எனக்குத்தான் இந்தத்தொகுதியைத் தர வேண்டும்’ என்று மேலிடத்தில் அடம்பிடித்து வந்தார், மாணிக் தாக்கூர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில் தேனி தொகுதியில் வலுவான நபரை நிறுத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், இளங்கோவனுக்கு தேனி தொகுதியை ஒதுக்கியது, காங்கிரஸ் மேலிடம். அதனால், மாணிக் தாக்கூருக்கு விருதுநகரில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிட்டது.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

கரூர்: கரூர் தொகுதியில், ஜோதிமணிக்குத்தான் சீட் என்பது உறுதியாகிவிட... ‘அவருக்கு சீட் தரக் கூடாது’ என்று ஜோதிமணியின் எதிரணியினர் சிலர் மேலிடத்தில் சொல்லி வந்தனர். ஆனாலும் தலைமை மசியாததால் சில நிர்வாகிகள் கட்சியை விட்டே விலகிச்சென்றனர். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜோதிமணி, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப்புள்ளிகளை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வந்தார். மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே ஜோதிமணியை வேட்பாளராகச் சித்திரித்துச் சமூகவலைதளங்களில் பதிவுகள் மற்றும் சுவர் விளம்பரங்களைக்கூட எழுதினர், ஜோதிமணியின் ஆதரவாளர்கள். அதேபோல மேலிடம் அறிவித்த பட்டியலிலும் ஜோதிமணியின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஜோதிமணி இந்தளவுக்கு உறுதியாக இருந்ததற்குக் காரணம், ராகுல் காந்தியின் ஆதரவுதான், என்கிறார்கள்.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

கிருஷ்ணகிரி: அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக உள்ள செல்லக்குமார், கிருஷ்ணகிரி தொகுதியைக் குறி வைத்துக் காய் நகர்த்தி வந்தார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பலரும் ‘இவருக்கு சீட் கொடுக்கக் கூடாது’ எனக் குரல் கொடுத்து வந்தனர். ஆனால், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர் முரளிதரன் ஆகியோரைச் சரிக்கட்டிய செல்லக்குமார் இவர்கள் இருவரிடமிருந்தும் பரிந்துரைக்கடிதம் வாங்கி மேலிடத்தில் கொடுத்துள்ளார். மேலும், இவரின் காதல் மனைவி, நாகாலாந்து முன்னாள் முதல்வரின் மகள். தனது மாமனார் மூலமாக டெல்லியில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சீட்டும் வாங்கிவிட்டார்.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

சிவகங்கை: கார்த்தி சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் என இவர்கள் இருவர் மட்டுமே வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதில் சுதர்சன நாச்சியப்பன் பெயரை டிக் அடித்த ராகுல், ‘ப.சிதம்பரம் மகனுக்கு சீட் கொடுக்கவே முடியாது’ என்பதில் உறுதியாக இருந்ததால், அப்செட் ஆகிப்போனார் ப.சி. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவர், பின்னர் சோனியாவைப்போய்  பார்த்தார். அதன்பிறகுதான் வேட்பாளர் பட்டியலிலிருந்த சுதர்சன நாச்சியப்பன் பெயர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது என்கின்றனர். ‘குற்றப்பின்னணி உள்ள ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் நியமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன...’ என்று இப்போது கேள்வி எழுப்பி வருகிறார் சுதர்சன நாச்சியப்பன்.

போட்டா போட்டி... காங்கிரஸில் சீட் வாங்கியது எப்படி?

புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியதிலிருந்தே காய் நகர்த்தத் தொடங்கினார் சபாநாயகர் வைத்திலிங்கம். அதேபோல நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்து நாராயணசாமி முதல்வராகக் காரணமாக இருந்த ஜான்குமாரும் சீட் வாங்கத் தீவிரமாக முயற்சி செய்துவந்தார். ஆனால், கட்சிக்குள் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்த முடிவைக் கைவிட்ட நாராயணசாமி, ‘முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியத்தை நிறுத்தலாம்’ என்று அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற்றார். இதைக் கேள்விப்பட்ட வைத்திலிங்கம், “தொடர்ந்து 30 வருடங்கள் எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன். முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறேன். 2009-ல் நான் புதுச்சேரி முதல்வராக இருந்தபோது நாராயணசாமியை எம்.பி-யாக்கியிருக்கிறேன். என்னைப் பரிசீலிக்காமல் யாரையெல்லாமோ நிறுத்துவது குறித்துப் பேசுகிறீர்கள்” என்று புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத்திடம் உறுமியிருக்கிறார். அதனையடுத்தே வைத்திலிங்கத்தின் பெயர் இறுதி செய்யப்பட்டது என்கின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

- ஜெ.முருகன், சி.ய.ஆனந்தகுமார், எம்.கணேஷ், ஆர்.சிந்து, தே.பாலமுருகன், கா.முரளி,
துரை.வேம்பையன், இரா.தேவேந்திரன், எம்.வடிவேல், ஹோசிமின்.
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ரா.ராம்குமார்,  நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism