Published:Updated:

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

Published:Updated:
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஒற்றுமையாக வந்த அ.தி.மு.க! பூரிப்பில் ராமதாஸ்

த்தியச் சென்னை தொகுதியின் பா.ம.க வேட்பாளர் சாம் பாலின் அறிமுகக் கூட்டம், மார்ச் 21-ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய சென்னை தொகுதிக்கு காய்நகர்த்திய கோகுல இந்திரா, வளர்மதி, வெங்கடேஷ் பாபு, ஜே.சி.டி பிரபாகர், பலராம் ஆகியோர் ஒற்றுமையாக வந்தார்கள். இதைப் பார்த்துப் பூரித்துப்போனாராம் ராமதாஸ். “எங்க ஆளுங்க யாராவது ஒத்துழைக்கலைனா, என்கிட்ட சொல்லுங்க, நான் பார்த்துக்குறேன்” என ராமதாஸுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதிமொழிதான் இதற்குக் காரணமாம்.

சு.வெங்கடேசன் இ.கம்யூனிஸ்ட்டா?

துரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையிட்டபோது, தேர்தல் விதியை மீறியதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் அவர்மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதில், அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். ‘இது குறித்து போலீஸில் புகார் செய்த தேர்தல் அலுவலர்களுக்கு இதுகூட தெரியாதா?’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் தோழர்கள்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஹை-ஜம்ப் அடித்த ஜெயக்குமார்!

டசென்னை தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், தண்டையார்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் மார்ச் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல்செய்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவசரமாக வந்த அமைச்சர் ஜெயக்குமாரின் வாகனம், சாலைப் பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிவிட்டது. காரிலிருந்து இறங்கிய ஜெயக்குமார் சாலைத் தடுப்புகளுக்குள் புகுந்து வெளியேறி, பள்ளத்தை ‘ஹை ஜம்ப்’ செய்து,  மூச்சிறைக்க  தேர்தல் அலுவலகத்துக்கு ஓடிவந்தார். அங்கு பார்த்தால், தே.மு.தி.க வேட்பாளர் வரவில்லை. உஷ்ணமான ஜெயக்குமார், “அம்மா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?’’ என்று சுற்றியிருந்த கட்சியினரிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்.

“உடம்பு சரியில்லை... மகனை ஜெயிக்க வையுங்க”

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில், முன்னாள் சபாநாயகரான பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பி.ஹெச்.பாண்டியன், “1972 முதல் இந்தத் தொகுதியுடன் தொடர்பில் இருக்கிறேன். எனது உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளியே தலைகாட்டாமல் இருந்தேன். தேர்தல் முடிவு வரும்வரையிலும் எனது உடல்நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. அதனால் என்னை மனதில் வைத்து மனோஜ் பாண்டியனை வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்றார் உருக்கமாக!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

“பத்து லிட்டர் பிராந்தி” வேட்பாளர் உறுதிமொழி!

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவர் திருப்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, வெளியிட்ட அதிரடி தேர்தல் அறிக்கைசு சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. ‘‘என்னை எம்.பி-யாகத் தேர்ந்தெடுத்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவேன். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 25 ஆயிரம் பணம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவேன்...’’ என்று சொல்லியிருப்பவர், இறுதியாகச் சொல்லியிருப்பதுதான் ஹை-லைட்... ‘‘அனைவரும் மருந்துக்காகச் சாப்பிடும் சுத்தமான ஒரிஜினல் பிராந்தியை, பாண்டிச்சேரியிலிருந்து  வாங்கிவந்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் 10 லிட்டர் தருவேன்’’ என்று கூறித் தெறிக்கவிட்டிருக்கிறார்.

தேர்தல் வெற்றிக்காக யாகம்!

தூத்துக்குடி தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன், மார்ச் 24-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தார். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்தவுடன் மூலவர், உற்சவரைத் தரிசனம் செய்தார். பின்னர், சூரசம்ஹாரமூர்த்தி சந்நிதி முன்பு, சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொண்டார். எதிரிகளை வலுவிழக்கச் செய்வதற்காக இந்த சத்ரு சம்ஹார யாகம் என்கிறார்கள். யாகத்துக்குப் பின்னர் மூலவர் சன்னதிக்குச் சென்ற தமிழிசை, ஒன்றரை அடி உயர வெள்ளிவேல் ஒன்றைக் காணிக்கையாக உண்டியலில் போட்டார். கோயிலிலிருந்து வெளியே வந்த தமிழிசைக்கு, கோயில் யானை ஆசிர்வாதம் செய்தது. இதையே சென்டிமென்ட்டாக எடுத்துக்கொண்ட தமிழிசை தெம்பாகப் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

கனிமொழிக்கு வாக்கு கேட்ட அ.தி.மு.க வேட்பாளர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் இடைத்தேர்தல் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், “விளாத்திகுளம் அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க இங்கு வெற்றி பெறும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார். பதறிப்போன அவரது ஆதரவாளர்கள் “அண்ணே... மாத்திச் சொல்லிட்டீங்க... தமிழிசைன்னு சொல்லுங்க” என்றதும், சுதாரித்தவர், “சகோதரி தமிழிசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார் தடுமாற்றத்துடன்! 

தலைமைக் கழகத்தில் பட்டுவாடா?

மார்ச் 18 முதல் 20-ம் தேதிவரை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை. முதல் மாடியை ‘சீல்’ வைத்ததுபோல, ஒரு குழு இரவு பகலாக வேலைபார்த்தது. விசாரித்ததில், செலவு விஷயங்களைக் கவனிக்க மாவட்டச் செயலாளர்களுக்குத் தேவையானவற்றை  இங்கிருந்துதான் பேக் செய்துகொடுத்தார்கள் என்கிறார்கள்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

“மகனுக்கு சீட் கேட்கவில்லை!” எம்.ஆர்.கே. பன்னீர் விளக்கம்...

தி.மு.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் சிதம்பரத்தில் மார்ச் 23-ம் தேதி நடந்தது. கூட்டத்தில் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,  தி.க. மாநிலப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் என தமிழகம் தழுவியத் தலைவர்களைக்கொண்ட மாவட்டமாக கடலூர் உள்ளது. தேர்தலில் தோற்றுப்போனால், மானம் போய்விடும். எனவே, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஒரே நோக்கம் வெற்றியாக மட்டுமே இருக்க வேண்டும். கடலூர் தொகுதியில் என் மகனுக்கு சீட் கேட்டதாகவும், கொடுக்காததால் மன வருத்தத்தில் இருப்பதாகவும் தவறான செய்திகள் பரப்பப் படுகின்றன. என் மகனுக்கு சீட் கேட்கவும் இல்லை. கட்சிமீது வருத்தமும் இல்லை” என்றார்.

கடுப்பில் அ.தி.மு.க பேச்சாளர்கள்!

தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள், கட்சி சீனியர்கள், பேச்சாளர்கள் சுற்றுப்பயணம் செய்வதற்குத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒவ்வொரு கட்சியும் அத்தாட்சிக் கடிதத்தைப் பெறுவது வழக்கம். ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க சார்பில் அமைச்சர்களுக்கு, கட்சி ஸ்டார் பேச்சாளர்களுக்கு எனச் சரிபாதியாக கணக்கிட்டு அத்தாட்சிக் கடிதம் பெறப்படும். இம்முறை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ள அத்தாட்சி கடிதத்தில், திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், நிர்மலா பெரியசாமி தவிர மற்ற அனைவருமே அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என்பதால், மற்ற நட்சத்திரப் பேச்சாளர்கள் கடும் கொதிப்பில் உள்ளனர்.

“ஜெயலலிதா இருந்தவரையில் ராமராஜன், சிங்கமுத்து, நாஞ்சில் அன்பழகன் என ஸ்டார் பேச்சாளர்களுக்கு அத்தாட்சி கடிதத்தை வழங்கிவந்தார். தேர்தல் சமயத்தில், இது ஒரு கெளரவமாகப் பார்க்கப்பட்டது. இப்போது அதை எல்லாம் மறந்துவிட்டார்கள். இதனால் துடிப்புடன் பணியாற்றும் மற்ற பேச்சாளர்கள் கொதிப்பில் உள்ளனர்’’ என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இந்தமுறை ஒவ்வொரு நட்சத்திரப் பேச்சாளருக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்காக 10 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாம்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தேர்தல் விதிமீறிய முதல்வர்!

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மார்ச் 23, 24 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குச் சேகரித்தார். தேர்தல் நடத்தை விதிகள், போக்குவரத்து விதிகளைமீறி லாரி, லோடு ஆட்டோ போன்ற சரக்கு வாகனங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பற்ற முறையில் அ.தி.மு.க-வினர் அழைத்து வந்தனர். இவர்களுக்குத் தலைக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டது. முதல்வருக்கு, தேர்தல் அலுவலர்கள் ‘சல்யூட்’ அடித்தனர். தேர்தல் நடத்தை விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. தேர்தல் விதிமீறல் செய்த எடப்பாடி பழனிசாமிமீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கொந்தளிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ஸ்மைல் ப்ளீஸ்... கலகலக்க வைத்த நேரு!

திருச்சி தொகுதிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தி.மு.க சார்பில், கே.என்.நேரு, எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ், பெரியண்ணன் அரசு, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். காத்திருப்போர் அறையில் அவர்கள் காத்திருக்க, அவர்களைப் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள். அப்போது, ஜாலி மூடில் இருந்த நேரு... “எப்பவும் நீங்கதான் போட்டோ எடுப்பீங்களா? நாங்களும் எடுப்போமுல்ல...” என்றபடியே ஒரு போட்டோகிராபரின் கேமராவை வாங்கியவர், ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்றபடிச் சடசடவென கிளிக்கி தள்ளினார்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

“முதல்வர் முகத்தில் முழிக்கமாட்டோம்!”

காரைக்குடியில், பி.ஜே.பி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்துப் பேசிய அமைச்சர் பாஸ்கரன், “சிவகங்கை எம்.பி-யாக ராஜாவையும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக நாகராஜனையும் ஜெயிக்கவைக்காமல் நாங்கள் உங்கள் (முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி) முகத்தில் முழிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு நானும், மாவட்டச் செயலாளரும் சென்னையில் இருந்து வந்திருக்கிறோம். ராஜகண்ணப்பன் சீட் கிடைக்கவில்லை என்று தி.மு.க-வுக்குப் போய்விட்டார். அவர் வேட்பாளராக நின்றபோது வெற்றிபெற்றதாக அறிவித்தும்கூட அவர் எம்.பி-யாக முடியவில்லை. அந்த வழக்கு இன்னும் முடியவில்லை. அதற்குள் யாரை எதிர்த்து வழக்கு போட்டாரோ அவர்களுக்காக வேலை செய்யப் போய்விட்டார். யாதவர்கள் எல்லாம் நான் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்று சொல்வது எல்லாம் அந்தக் காலம்” என நக்கலடித்தார்.

- ஜூ.வி டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism