Published:Updated:

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி
பிரீமியம் ஸ்டோரி
வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி
பிரீமியம் ஸ்டோரி
வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி
வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

பா.ம.க சார்பில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதால், ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி. மேட்டூர், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி. இத்தொகுதியில் தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

அ.தி.மு.க கூட்டணி பலம், தொகுதியில் 50 சதவிகிதம் உள்ள வன்னியர் சமூகத்தினரின் ஓட்டு வங்கி... இவையே இத்தொகுதியில் அன்புமணி மீண்டும் போட்டியிட முக்கியக் காரணங்கள். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது பா.ம.க. அப்போது எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அது, தர்மபுரி தொகுதி. பா.ம.க வேட்பாளர்களில் அப்போது அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில், பா.ம.க நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் இன்னொரு முக்கியமான விஷயம். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இருப்பதாகச் சொல்லிவரும் அன்புமணி, தனக்குத் தொகுதியில் இருக்கும் செல்வாக்கை நம்பித்தான் மீண்டும் தர்மபுரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ் மைனஸ் என்னென்ன?

வன்னியர் சமூகத்தினரின் வாக்கு வங்கி மட்டுமே அன்புமணிக்கு ப்ளஸ். அத்துடன், இந்தத் தேர்தலில், தாராளமாகப் பணம் செலவு செய்ய முடிவு செய்திருக்கிறது, பா.ம.க. அதுவும் இவருக்குக் கூடுதல் பலம். அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் திடீரென அக்கட்சியோடுக் கூட்டணி வைத்ததற்குத் தமிழக அளவில் சலசலப்பு கிளம்பியது. இது, அன்புமணிக்கு மைனஸான விஷயம். ஆனால், தமிழக மக்களின் உரிமைகளை மீட்கவே அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருப்பதாகச் சொல்லிச் சமாளித்துவருகிறார், அன்புமணி. சிட்டிங் எம்.பி-யாக இருந்தும், ‘கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொகுதி மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. நிர்வாகிகளைச் சந்திப்பதுடன் மட்டும் நிறுத்திக்கொண்டு, மக்களைச் சந்திக்க வரவேயில்லை’ என்பது அன்புமணிமீதான முக்கியக் குற்றச்சாட்டு. இதுவும் அவருக்கு மைனஸான விஷயம். அதேபோல பா.ம.க சார்பில் பூத் கமிட்டிகளை அமைக்காமல், அ.தி.மு.க அமைக்கும் பூத் கமிட்டிகளோடு பா.ம.க-வினரை இணைந்து வேலை செய்யச் சொல்லி வருகிறார், அன்புமணி. இதனால், தொகுதியில் உள்ள பா.ம.க-வினர் சோர்வடைந்துள்ளனர். இதுவும் அன்புமணிக்குப் பாதகமாக உள்ளது. தொகுதியில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ஓட்டுகள் பட்டியல் இன மக்களிடம் உள்ளன. அவர்களது எதிர்ப்பும் அன்புமணிக்கு மைனஸான விஷயம்தான்.

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

தேர்தல் பட்ஜெட்!

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் கடுமையாக எதிர்த்துவந்த கட்சி, பா.ம.க. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக சில அரசியல் கட்சிகள்மீது, தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்திருக் கிறது. ஆனால், தற்போதைய தேர்தலில், சத்தம் இல்லாமல் வாக்காளர்களைக் ‘கவனிக்க’ இருக்கிறதாம் பா.ம.க.

அதனால்தான் தற்போது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விவகாரம்குறித்து ராமதாஸோ, அன்புமணியோ வாய் திறக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்காக பா.ம.க எழுபத்தெட்டு கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவே அந்தக் கட்சியினருக்குத் தெம்பைத் தந்திருக்கிறது!

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி?

அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த அன்புமணியுடன் இணைந்து பணியாற்ற அ.தி.மு-வினர் கொஞ்சம் தயக்கம் காட்டிவருகிறார்கள். அதனால், கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை. ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்த விஷயத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த உண்மைத் தொண்டர்கள் பா.ம.க மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் அன்புமணியே மீண்டும் போட்டியிடுவதால் பா.ம.க-வுக்குள்ளும் கொஞ்சம் சலசலப்பு உள்ளது.

அன்புமணியின் சார்பில் பேசிய பா.ம.க-வினர், “நாங்கள் மகிழ்ச்சியுடன் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறோம். மக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தர்மபுரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றி யுள்ளோம். தர்மபுரியில் ரயில் பாதைத் திட்டத்தை நாங்கள் தான் நிறைவேற்றியுள்ளோம். தற்போது விவசாயிகளுக்குத் தேவையான நீர் மேலாண்மைத் திட்டங்களை முன்வைத்துப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். இத்தகைய விஷயங்கள், எங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும்” என்கிறார்கள்.

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

பணம், வன்னியர் சமூக மக்களின் வாக்கு வங்கி இரண்டை மட்டுமே நம்பிக் களத்தில் இருக்கிறார், அன்புமணி. தி.மு.க சார்பில் போட்டியிடும் டாக்டர். செந்தில்குமாரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். மேலும், இவர் உள்ளூர் வேட்பாளர். ஆனாலும், தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசலால் கொஞ்சம் பீதியில் இருக்கிறார், செந்தில்குமார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாப்பிரெட்டி பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பழனியப்பன், அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இவர், வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்குச் சின்னம் மிகப்பெரிய மைனஸ். இவை எல்லாம் அன்புமணிக்கு சாதகமான விஷயங்களே. ஆனாலும், வேகம் குறையாமல் ஓட வேண்டும் அன்புமணி. அப்போதுதான் தர்மபுரியில் மாம்பழம் பழுக்கும்.

- எம்.வடிவேல்
படங்கள்: வ.யஷ்வந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism