Published:Updated:

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

ஓவியம்: அரஸ்

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

ஓவியம்: அரஸ்

Published:Updated:
வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்
வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுவதால்... அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி. ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது, இத்தொகுதி. நிசான், ஹூண்டாய், ராயல் என்ஃபீல்டு, செயின்ட்கோபெயின் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் பசையான தொகுதியும்கூட.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

தி.மு.க முதன்மைச் செயலாளரான டி.ஆர்.பாலு, 1996, 1998, 1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்றவர். 2009-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பில்... தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்த தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வந்துவிட்டன. அதேபோல ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சில பகுதிகள், ஏற்கெனவே தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தவை. அதனால்தான், 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றார், டி.ஆர்.பாலு.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் டி.ஆர்.பாலு ஒரு ஸ்பிரிட் ஆலையைத் தொடங்கியபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஸ்பிரிட் ஆலை எதிர்ப்பாளர்களைப் பின்னால் இருந்து இயக்கி வந்தவர், மாவட்ட தி.மு.க செயலாளர் பழனிமாணிக்கம்தான் என்று தகவல்கள் கசிய... பழனிமாணிக்கத்தை வீழ்த்தவேண்டும் என்பதற்காகக் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார் டி.ஆர்.பாலு. ஆனால், அங்கு பழனிமாணிக்கத்தின் கை ஓங்கியிருந்ததால், டி.ஆர்.பாலுவால் வெற்றி பெற முடியவில்லை. அதனால்தான், மீண்டும் தனக்கு நன்கு பரிச்சயமான ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கே வந்துவிட்டார்.

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிளஸ் மைனஸ் என்னென்ன?

கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது ஆலந்தூர் மேம்பாலம் திறப்பு விழாவில் ‘பாலம்’ பாலு என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அழைக்கப்பட்டவர், டி.ஆர்.பாலு. தென்சென்னை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது... கத்திப்பாரா மேம்பாலம், மீனம்பாக்கம் மேம்பாலம், பல்லாவரம் மேம்பாலம், குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம், ஆலந்தூர் ரயில்வே மேம்பாலம், தாம்பரம் சானட்டோரியம் மேம்பாலம், பாடி மேம்பாலம், ஈஸ்வரி நகர் மேம்பாலம், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மீனம்பாக்கம் சுரங்கப்பாதை, தர்கா ரோடு சுரங்கப்பாதை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்த இத்திட்டங்கள் இன்றளவும் மக்களால் பேசப்படுவது, இவருக்கு ப்ளஸ்.

அதே நேரத்தில், கடந்த 2009-ம் ஆண்டில் இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றிபெற்றும் தொகுதிக்குப் பெரிய அளவில் எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்பது இவரின் மைனஸ். அதேபோலத் தொகுதி மக்களிடமும் சரி, கட்சிக்காரர்களிடமும் சரி... எல்லோரிடமும் எரிந்துவிழுவது, கடுகடுவெனப் பேசுவது இவரது மைனஸ் பாயிண்ட். பதவிக்கு வந்துவிட்டால், இவரை யாரும் எளிதில் அணுக முடியாது என்று இவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டும் மைனஸாக இருக்கிறது. அதோடு, ‘டி.ஆர்.பாலு, தேர்தல் செலவுகளுக்குத் தயக்கம் காட்டுகிறார்’ என்ற குற்றச்சாட்டும் தி.மு.க தொண்டர்களிடையே உள்ளது.

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி?

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் பெரும்பகுதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் வசம் உள்ளது. டி.ஆர்.பாலு தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்பதால், தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஜெ.அன்பழகன், நாசர் ஆகியோரின் ஒத்துழைப்பும் நன்றாகவே இருக்கிறது. அதேபோல வசதி படைத்த வேட்பாளர் என்பதால்... காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் போதுமான ஒத்துழைப்புக் கொடுத்துவருகிறார்கள். தேர்தல் செலவுகளில் டி.ஆர்.பாலு கொஞ்சம் தாராளம் காட்டினால், இவர்கள் இன்னும் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

டி.ஆர்.பாலுவின் மகன் டிஆர்.பி.ராஜாவிடம் பேசினோம். “அப்பா மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு 58,000 கோடி ரூபாய் அளவுக்குத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்துக்குத் தன்னால் முடிந்த அளவுக்குத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அப்பா, அமைச்சர் பதவியில் இல்லாமல், ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருக்கும்போதும் தமிழகத்துக்கு நிறையத் திட்டங்கள் வரப் பாடுபட்டுள்ளார். இவை அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லித்தான் வாக்குகளைச் சேகரிக்கிறோம். ஆளுங்கட்சிக் கூட்டணியின் சதி வேலைகளை முறியடித்து அப்பா வெற்றி பெறுவார்” என்றார்.

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தற்போதைய எம்.பி-யான கே.என். ராமச்சந்திரன், தொகுதிக்குள் தலைகாட்டவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில், பா.ம.க சார்பில் போட்டியிடும் டாக்டர் வைத்தியலிங்கம், அன்புமணிக்கு நெருங்கிய நண்பர். ஆனால், இவர் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இவருக்கு அறிமுகம் இல்லை. கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பிக் களம் இறங்கியிருக்கிறார், வைத்தியலிங்கம். அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் ‘தாம்பரம்’ நாராயணனுக்கும் இத்தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை.

அந்தவகையில், தனிப்பட்ட செல்வாக்கு, சொந்தக் கட்சியினரின் ஆதரவு, கூட்டணிக் கட்சியினர் கொடுக்கும் உற்சாகம் போன்றவற்றால், பந்தயத்தில் உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கிறார், டி.ஆர்.பாலு.

- பா.ஜெயவேல், இரா.தேவேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism